இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி... முதல் பெண் குடிமைப் பணி அதிகாரி இந்தியாவின் முதல் பெண் தூதர் - சி.பி.முத்தம்மாள்

முதல் பெண்கள்! ஹம்சத்வனி, ஓவியம் : கார்த்திகேயன் மேடி

ர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியைச் சேர்ந்த விராஜ்பேட் கிராமத்தில் 1924, ஜனவரி 24 அன்று பிறந்தார் முத்தம்மாள். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். வனத்துறை அதிகாரியான தந்தை சிறு வயதிலேயே இறந்துவிட, அன்னையின் அரவணைப்பில், கிடைத்த கல்வியை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு வளர்ந்தார் முத்தம்மாள். மடிகேரி செயின்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர், சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மூன்று தங்க மெடல்களுடன் வெற்றிகரமாக முடித்தார். மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர், 24-வது வயதில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றார்.

நேர்முகத் தேர்வு நாள் வந்தது. `விருப்பப்பணி என்ன?' என்ற கேள்விக்கு, `வெளியுறவுத்துறை' என்ற முத்தம்மாளின் பதில்தான் அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டது. `வெளியுறவுத்துறை பெண்களுக்கு ஏற்றதல்ல' என்று அப்போதைய நேர்முகத் தேர்வுக் கமிட்டி அறிவுறுத்த, அதுதான் தன் விருப்பம் என்று விடாப்பிடியாக நின்றார் முத்தம்மாள். வேறு வழியின்றி மிகக் குறைந்த மதிப்பெண்ணை அவருக்கு வழங்கியது தேர்வுக் குழு. அப்படியும், இந்திய வெளியுறவுத்துறை பணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் முத்தம்மாள். முத்தம்மாள் ஐ.எஃப்.எஸ் கையெழுத்திட்ட முதல் கோப்பு - `பணிக்காலத்தில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்கிற உறுதிமொழி!

ஃபிரான்ஸில் தன் பணியைத் தொடங்கினார் முத்தம்மாள். அடுத்தடுத்து ரங்கூன், இங்கிலாந்து ஆகிய இடங்களில் தூதரக அதிகாரியாகவும், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க `டெஸ்கு'களிலும் பணியாற்றினார். `நீங்கள்தான் இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரி' என்ற பாராட்டுக்கு அவரது பதில்... `யாரோ ஒருவர் முதல் பெண்ணாக இருக்க வேண்டும். அந்த இடத்தில் நிற்கும் அளவுக்கு நான் வயது முதிர்ந்தவளாக இருந்தேன்' என்பதாகவே இருந்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick