நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் அவார்டு... - தாய்க்கு சமர்ப்பணம்!

`தங்கள் கடின உழைப்பின் அங்கீகாரத்துக்குக் கிடைத்த விருதினை தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்வதைவிட வேறு யாருக்கு சமர்ப்பணம் செய்வது சரியாக இருக்கும்?' - நாணயம் விகடன் சென்னையில் நடத்திய ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ வழங்கும் நிகழ்ச்சியில் ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ பெற்ற     ஜி.ஆர்.டி குரூப் நிறுவனத்தின் தலைவர் ஜி.ராஜேந்திரன், தனக்குக் கிடைத்த விருதினைத் தனது தாய்க்கு சமர்ப்பணம் செய்தபோது, அரங்கமே கைதட்டி வரவேற்றது. 

தொழில் துறையில் மகத்தான பங்களிப்பைச் செலுத்தியதற்காக அவருக்கு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கப்பட்டது. விருதினைப் பெற்ற அவர், “என் குடும்பம் ரொம்பப் பெருசு. எங்கிட்ட வேலை பார்க்குறவங்க எல்லாருமே என் குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான். என் அம்மாவுக்கு இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்’’ என்று உணர்ச்சிவசப்பட்டார். முருகப்பா குழுமத்தின் ஆலோசகரும், கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம் நிறுவனத்தின் தலைவருமான எ.வெள்ளையன் இந்த விருதினை வழங்கினார்.

ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குமுன், மெட்ராஸ் கோ-ஆபரேட்டிவ் சென்ட்ரல் பேங்க் எனப் புகழ்பெற்று விளங்கிய கூட்டுறவு வங்கியில் ஆய்வாளராக வேலை பார்த்தவர் ஜி.ராஜேந்திரன். தங்க நகைகள்மீது மக்கள் அலாதியான பிரியம் வைத்திருப்பதைப் பார்த்து, தங்க நகைகளைச் செய்துதரும் நகைக்கடையைச் சொந்தமாகத் தொடங்கினார். அவரது தாயார் மகாலட்சுமி அம்மாளின் ஆசையும் அதுவே. 1964-ம் ஆண்டில் 400 சதுரஅடியில் ஒரு சிறிய நகைக்கடையைத் தொடங்கினார். அந்தக் கடைக்காக அவர் கொடுத்த வாடகை ரூ.100. தரமான தங்க நகையை நல்ல டிசைனுடன் தந்ததால், பெண்கள் அவர் கடையைத் தேடி வரத் தொடங்கினார். கடையின் பெயரை `ஜி.ஆர்.தங்க மாளிகை' என மாற்றினார். இப்போது அதுவே `ஜி.ஆர்.டி' என்று மாறியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick