டிப்ஸ்... டிப்ஸ்...

குழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு எப்போதும் சந்தேகங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இதழ்கள் முதல் இணையம் வரை அது தொடர்பான தகவல்களைத் தேடித்தேடிப் படிப்பார்கள். அவர்களுக்காக இந்த இதழில் நிறைந்திருக்கும் பெற்றோர்களுக்கான பேரன்ட்டிங் டிப்ஸ்களை வழங்கியிருப்பவர், சென்னையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவர் பிரேம்குமார்.

குழந்தைக்குப் பத்தாவது மாதத்துக்குப் பிறகு பால் பற்கள் முளைக்கத் தொடங்கும். ஒன்றரை வயதில் அதிக எண்ணிக்கையிலான  பற்கள் முளைத்துவிடும். இந்தக் காலகட்டத்தில் அவர்களுக்குப் பல் துலக்கும் பயிற்சியைக் கொடுக்கலாம். அதற்காக எடுத்த எடுப்பிலேயே பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம். முதலில் வாய் கொப்பளிக்கும் பயிற்சி வழங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள், அடுத்து பல் துலக்கக் கற்றுக்கொள்ளும்போது பேஸ்ட் எசென்ஸை விழுங்காமல்  இருப்பார்கள். வாய் கொப்பளிக்கப் பழக்கிய பிறகு, அம்மாக்கள் தங்கள் விரல்களால் குழந்தைகளின் பற்களைத் தேய்த்துவிடலாம். இரண்டு வயதுக்குப் பின்னர் குழந்தைகளுக்கான பிரத்யேக சாஃப்ட் பிரஷ்களைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பல் துலக்கிவிட வேண்டும்.

பெற்றோர்கள் பலர், பழங்கள் கொடுத்தால் குழந்தைகளுக்குச் சளி பிடித்துக்கொள்ளும் என எண்ணி, பழங்களைக் குழந்தைகள் சாப்பிடப் பழக்காமல் விட்டுவிடுகிறார்கள். பின்னர் 10 வயதுக்குப் பின் குழந்தை ஆரோக்கியமாக இல்லை எனப் பழங்களைக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அப்போது வற்புறுத்திக்கொடுக்கும்போது, குழந்தைகளுக்குப்  பழங்களின் மீது விருப்பமே இல்லாமல் போய்விடும். எனவே, ஒரு வயதில் இருந்தே பழங்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கி, குழந்தையின் கைகளில் கொடுத்துச் சாப்பிடப்  பழக்கப்படுத்துங்கள்.
தொகுப்பு: சு.சூர்யா கோமதி
 

காலை நேரச் சூரிய ஒளி தினமும் 10 நிமிடங்கள் குழந்தைகளின் சருமத்தில் படும்படிச் செய்வது நல்லது. இதன் மூலம் அவர்களுக்கு வைட்டமின் டி சத்து கிடைத்து எலும்புகள் உறுதிப்படும்.

குழந்தைகளை வாக்கரில் உட்காரவைக்கும்போது அவர்கள் கால்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும். எனவே, வாக்கரைத் தவிர்த்து நடை வண்டியின் மூலம் குழந்தைகளுக்கு நடைப்பயிற்சி அளிக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick