பணிக்குச் செல்லும் பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்! - ஆயுஷி குட்வானி

மாத்தி யோசி

வொர்க்கிங் வுமன்களுக்கான `ப்ரீமியம் வொர்க்வேர்' (Premium Workwear) ஆயத்த ஆடைகளைத் தயாரித்து விற்பனைசெய்யும் ஆயுஷி குட்வானி, மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

`வொர்க்கிங் இண்டியன் வுமன்’களுக்கான ஆடைகள் உலகின் ட்ரெண்ட் செட்டர் எனப் பாராட்டப்படுபவரை டெல்லியில் சந்தித்தோம். ஒரு டிசைனர் தயாரித்த ஆயத்த ஆடையைப் பரிசோதித்து, சில மாற்றங்களைப் பரிந்துரைத்த பின்னர், நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

‘`இன்ஜினீயரிங் முடித்த பின் கொல்கத்தா ஐஐஎம்-மில் எம்.பி.ஏ பயின்றேன். பன்னாட்டு நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன். அப்போது, பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றங்களான மாதவிடாய், கர்ப்ப காலம் முதல் பிரசவத்துக்குப் பிறகான எடை அதிகரிப்பு வரை எல்லாவற்றையும் மனரீதியாக வெற்றியுடன் எதிர்கொண்டேன். ஆனால், இவை என் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து, என் உயர் பதவிக்கான கண்ணியத்துக்குக் கைகொடுக்கும் பொருத்தமான ஆடைகள் கிடைக்காமல் அவதிப்பட்டேன். அயல்நாடுகளுக்கு அலுவலக வேலையாகப் பயணித்தபோது, பெண்களின் உடல்ரீதியான மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பொருத்தமான உடைகள் ஆயத்த ஆடைகளாகக் கிடைப்பது என் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவிலும் ஒரு சில சிறு நிறுவனங்கள் உள்ளூரில் இருக்கும் தையல் கலைஞர்களைப் பணிக்கு அமர்த்தி சிறிய அளவில் பெரிய முதலீடு இன்றி, அதைச் செய்து வருவதை அறிந்தேன். ஆனாலும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இந்தியத் தயாரிப்புகள் இல்லாததை உணர்ந்தேன். இந்த செக்மென்ட்டில் பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னர், கைநிறைய சம்பளம் வந்த பன்னாட்டு நிறுவன உயரதிகாரி பணியிலிருந்து விலகினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick