டிராவல் என்பதே ஒரு சுகானுபவம்! - அனுராதா கோயல்

தனியே.... தன்னந்தனியே....

ண்டிடேல்ஸ் (IndiTales) - பயண ஆர்வலர்களுக்கான முக்கியமான வலைதளம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் பயணப் பிரதேசங்களின் சிறப்புகளை அழகான புகைப்படங்களுடன் விளக்கும் இந்த வலைதளம் பல விருதுகளை வென்றிருக்கிறது. அத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரர் அனுராதா கோயல். பயணக் காதலி.

18 நாடுகள்.... இந்தியாவில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பயணம் செய்த அனுபவம் உள்ளவர்.

‘`இந்த எண்ணிக்கையில் எனக்கு உடன்பாடில்லை. சின்னச் சின்ன நகரங்களையெல்லாம் கணக்கெடுக் கிறதில்லை. பயணம்செய்கிற மூலை, முடுக்குகள் எல்லாமே எனக்கு முக்கியம்தான்’’ என்பவருக்குப் பூர்வீகம் பஞ்சாப்.

‘`அப்பா பாதுகாப்புத்துறையில்  வேலை பார்த்திட்டிருந்ததால இந்தியா முழுவதும் டிராவல் பண்ணியிருக்கோம், பல மாநிலங்களில் வாழ்ந்திருக்கோம். சண்டிகரில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர்ஸ் முடிச்சேன். பெங்களூரில் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்திட்டிருந்தபோதே ‘இண்டிடேல்ஸ்’ என்ற பெயர்ல டிராவல் பிளாக்  ஆரம்பிச்சுப் பயணக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்.  நான் பயணம் செய்த இடங்களைப் பற்றியும் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் எழுத ஆரம்பிச்சபோது வாசகர்களுக்கு அது ரொம்ப உபயோகமானதா இருந்தது.  பதிவுக்காக ஆரம்பிச்ச வலைதளப் பணி, இன்னிக்கு அதுதான் என் பிரதானமான அடையாளமா மாறியிருக்கு...’’ - அறிமுகம் சொல்பவருக்கு நினைவுகளை நிறைத்திருப்பவை பயணங்களே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick