கிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி! | kitchen basics - Poori - Aval Vikatan | அவள் விகடன்

கிச்சன் பேஸிக்ஸ்: புஸு புஸு பூரி... வீட்டிலேயே ரெடி!

விசாலாட்சி இளையபெருமாள்,  படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்தது பூரி. அம்மாக்களுக்கோ பூரி எண்ணெயில் பொரித்த பலகாரம் என அதைச் செய்யத் தயக்கம். வாரம் ஒருமுறை குழந்தைகள் மற்றும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அவர்களுக்குப் பிடித்த பூரியைச் சத்தான வகையில் காய்கறி மற்றும் இதர பொருள்கள் சேர்த்துச் செய்து கொடுக்கலாம். பூரிக்குப் பூரியும் ஆச்சு... சத்துக்குச் சத்தும் ஆச்சு!

நாம் இதுவரை `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் கோதுமை சப்பாத்தி மற்றும் அதைச் சார்ந்த இதர வகையான சப்பாத்தி, ரொட்டி, பராத்தாக்கள் என வரிசையாகப் பார்த்துக்கொண்டு வந்தோம். இதைத் தொடர்ந்து பூரி மற்றும் அதில் பல வகைகளைச் செய்யக் கற்றுக்கொள்வோம்.

பொதுவாக குழந்தைகள் அம்மாக்களிடம் கேட்பது - `அம்மா எனக்குப் புஸு புஸு பூரி வேணும்’. ஆனால், அம்மாக்களோ `நான் என்னடா ஹோட்டலா நடத்தறேன்... புஸு புஸு பூரி செய்யறதுக்கு’ என்று சொல்கிறோம். புஸு புஸு பூரி செய்வது அவ்வளவு கடினம் அல்ல. சில நுட்பங்களைத் தெரிந்துகொண்டால், அப்புறம் வீட்டிலும் புஸு புஸு பூரிதான்.

கோதுமை மாவு தயாரிப்பதற்கு, கோதுமை வாங்கி ஒருநாள் முழுக்க வெயிலில் காயவைக்கவும். மெஷினில் கொடுத்து நன்கு நைஸாகத் திரித்துக்கொள்ளவும். கோதுமை மாவைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக்கொள்ளவும். இப்படித் தயாரிக்கப்படும் மாவில் ‘வீட்ஜெர்ம்’ இருப்பதால் இதில் வெளியே விற்கும் மாவை விட அதிக நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick