தெய்வ மனுஷிகள் - பாப்பு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

முத்து ஊர்ல துணியெடுத்து வெளுத்துக் குடுக்குற தொழிலாளி. ஆளு ரொம்ப வலுவானவன். பார்க்க லட்சணமாவும் இருப்பான். முத்துவோட அப்பங்காரனும் தொழிலாளியா இருந்தவன்தான். அவனுக்கு ஒரு காலு சூம்பிப்போயிருக்கும். கழுதையை ஓட்டிக்கிட்டுப்போயி வீட்டுக்கு வீடு  துணியெடுத்து ஏத்திவிடுவான். கழுதை பாட்டுக்கு வெடவெடன்னு நடந்து துவைக்கிற துறைக்குப் போயிரும். அளவா உவர்மண் போட்டுத் துணிகளை ஊற வெச்சு பெரிய ஈயப்பானையில போட்டு வேகவைச்சு வெளுப்பான்.

முத்துவுக்கு இந்தத் தொழில்மேல விருப்பமில்லை. வீட்டுக்கு வீடு அடிமை போல நின்னு துணி கேக்குறதும் பழங்கஞ்சிக்காகப் பாத்திரமேந்திக்கிட்டு நிக்கிறதும் அவனுக்குச் சுத்தமாப் புடிக்கலே. அழுது அடம்புடிச்சு சின்ன வயசுலயே பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சுட்டான். அவன் தலைமுறையிலேயே பள்ளிக்கூடம் போன பய, முத்து ஒருத்தன்தான். எட்டாவது வரைக்கும் படிச்சான். ஒருக்கா, முத்துவோட அப்பங்காரன், உவர் மண்ணு அள்ள கரம்பைக்காட்டுக்குப் போகும்போது ஏதோ விஷம்தீண்டி உடம்பெல்லாம் ஊந்தண்ணியா வடிய ஆரம்பிச்சிருச்சு. அஞ்சாறு மாசம் இழுத்துக்கிட்டுக் கெடந்து ஒருநா செத்துப்போனான். அவனுக்குப் பெறவு ஊர்த்தொழில் செய்ய ஆளில்லை. சாவு, பூப்புன்னு எந்தத் தீட்டு காரியம் நடந்தாலும் தொழிலாளிதான் முதல்ல நின்னு சடங்கு செஞ்சாகணும். வழக்கமா, அப்பன் செத்தா புள்ளதான் அதைச் செய்யணும். ஆனா, முத்து அதுக்கு இசையலே. ஊர்ப் பஞ்சாயத்துக்கூடி, `கட்டாயம் செஞ்சுதான் ஆகணும்’னு சொல்லிப்புட்டாக. ஊரை விட்டுப் போகலாம்னா, வயசான அம்மாவையும் நாலைஞ்சு தொத்தக் கழுதைகளையும் கூட்டிக்கிட்டு எந்தூருக்குப் போயி என்ன தொழில் செஞ்சுப் பொழைக்கிறது... `ஆனது ஆகட்டும்’னு நினைச்சுக்கிட்டு அப்படியே இருந்துட்டான் முத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick