சீரியஸான சிம்பு ரசிகை நான்! - சின்னதிரை நாயகி ஃபரினா | TV Anchor Farina interview - Aval Vikatan | அவள் விகடன்

சீரியஸான சிம்பு ரசிகை நான்! - சின்னதிரை நாயகி ஃபரினா

என் காதல் சொல்ல வந்தேன்

ஸ்கூல் லைஃபில் எல்லோருக்குமே சின்னதா ஒரு ‘பப்பி லவ்’ இருக்கும்தானே? எனக்கு சீனியர் அவன். காதலைச் சொல்லும்போதே, அவ்வளவு நாகரிகமாக, ரொம்பவே அழகாகச் சொன்னான். குடும்ப விவரம், படித்துமுடித்த பிறகு பார்க்கவிருக்கும் வேலை, வாங்கவிருக்கும் சம்பளம் என ஆரம்பித்து எந்தத் தேதியில் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பது வரையிலாக டீட்டெயிலாக விவரித்தான். ஆனால்...’’

- சரளமான பேச்சினிடையே இடைவெளிவிட்டு, எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஃபரினா, சின்னத்திரையில் கேம் ஷோ, சீரியல், நிகழ்ச்சித் தொகுப்பு என பிஸியாக வலம்வருபவர்.

‘`காதலை நேரடியாகச் சொல்லத் தயங்குபவர்கள் நட்பு வட்டம் மூலமாகத் தூது விடுவார்கள். அந்த சீனியரோ ஒருபடி மேலேபோய், தனது அக்காவையே தன் காதல் தூதுவராக அழைத்துவந்திருந்தான். அவ்வ்வ்வ்வ்வளவு நேர்மையான - தூய்மையான லவ்வாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick