ஒரு வீடு, 24 குடும்பங்கள், மெகா பொங்கல்!

அருமை ஆச்சர்யம் இனிமை

தொன்மையான கலாசாரம், அழகிய கட்டடக்கலை, அருமையான சமையல்... அனைத்துக்கும் பெயர்பெற்ற செட்டிநாட்டு ஊர்களுள் ஒன்று நெற்குப்பை. சோமலெ, தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் பிறந்த மண். இங்கு, ஒரு குடும்பத்தின் வாரிசுகள் அனைவரும், கிட்டத்தட்ட 75 பேர் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக பொங்கல்வைத்துக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நெற்குப்பையில் `ராம.சா.ராம' குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பத்தின் சகோதரர்கள் நால்வர். இவர்களின் வழிவந்த பிள்ளைகள், பேரன்மார்கள், அவர்களின் குடும்பத்தினர் என 28 குடும்பங்கள் சேர்ந்த பெரிய வீடு அது.

இந்த மெகா பொங்கல் கொண்டாட்டத்துக்கான வித்தை விதைத்தவர்கள் சென்னை, திருவொற்றியூரில் இருக்கும் கரு.சுந்தரம் - வசந்தா சுந்தரம் தம்பதி. ‘‘எங்க மாமனார், அவரோடு பிறந்த மூணு பேர்னு நாலு பேருமே இப்ப உயிரோடு இல்லை என்றாலும், அவங்க நாலு பேரின் பிள்ளைகள், மருமக்களாகிய நாங்க ரொம்ப ஒத்துமையா இருப்போம். எங்க எல்லோருடைய பிள்ளைகளும்கூட அப்படித்தான், என்ன ஒண்ணு, எல்லோரும் கூடிப்பேசி சிரிக்கிறதுக்கான வாய்ப்பே ரொம்ப இருக்காது. வளவுக்குள்ள கல்யாணம்னா பிள்ளைங்க ஸ்கூல் கெட்டுப்போயிடும்னு குடும்பத்துக்கு ஒருத்தர்தான் வருவாங்க. தீபாவளி, பொங்கல்னு எல்லாத்தையுமே அவங்கவங்க இருக்கிற இடத்தில்தான் கொண்டாடுவாங்க.

ரெண்டு வருஷங்களுக்கு முன்னால, ஒரு பொங்கலன்னிக்கு பொங்கலிட்டுப் படைச்சு சாப்பிட்ட பிறகு எல்லாரும் உக்காந்து கேஷுவலா பேசிட்டிருந்தோம். அப்போதான் என் கணவர், ‘உங்க அய்யா, அப்பாத்தா இருந்தப்ப 15 வருஷங்கள் முன்னால நாங்க எல்லாம் நம்ம ஊர்லதாம்ப்பா பொங்கலிடுவோம். அவங்களுக்கு அப்புறம் அந்த வழக்கமே போயிடுச்சு’ன்னு வருத்தமா சொல்லிட்டிருந்தாங்க. உடனே, ‘அதேமாதிரி, நாமும் நம்ம ஊருக்குப் போய் பொங்கல் வெச்சா நல்லாயிருக்குமே’னு என் ஆசையைச் சொன்னேன். அது என்னுடைய நீண்ட நாள் ஏக்கம். அதை எங்க பையன் சாத்தப்பன்கிட்டயும் சொன்னோம். அடுத்த பொங்கலுக்கே எல்லோரும் சேர்ந்து கொண்டாடிலாம்னு சொன்ன அவன், அதுக்கான ஏற்பாடுகளை எங்க மருமக நித்யாகூட சேர்ந்து செய்ய ஆரம்பிச்சிட்டான்’’ என்று வசந்தா  முடிக்க... தொடர்ந்தார் அவர் மகன் சாத்தப்பன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick