விளையாட்டு புள்ள! - அவள் சினிமா | Kanaa Cinema Review - Aval Vikatan | அவள் விகடன்

விளையாட்டு புள்ள! - அவள் சினிமா

பெண்களின் `கனா’க்கள், அவர் களுடைய கண்களிலேயே சிதைந்துபோவதுதான் பெரும் பாலும் வாடிக்கை. துளியும் அது சிதைந்துவிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து, சாதித்துக் காட்டும் ஒரு பெண்ணின் பெருமை பேசுகிறது `கனா’ திரைப்படம். மகளை கிரிக்கெட் வீராங்கனையாக்குவதற்காகப் போராடும் தாய் தந்தை மற்றும் அவர்களுடைய விவசாயம் என அனைத்தையும் நெகிழ்ச்சியோடு காட்சிப்படுத்தியுள்ளனர்.

குளித்தலை கிராமத்தில் இருக்கும் சாதாரண விவசாயி சத்யராஜ். ஒரே மகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பாவுக்கு கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை உணர்ந்து தானும் ஒரு கிரிக்கெட் வீராங்கனையாக நினைக்கிறார். சிறுவயதில் ஊரிலிருக்கும் அண்ணன்களுடன் கிரிக்கெட் கற்றுக்கொள்ளும் அவர், பல தடைகளைத் தாண்டி இந்திய அணியில் இடம்பிடிக்க, கடுமையாகப் போராடுகிறார். அதற்காக அவர் சுமக்கும் வலிகள், அதிலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகள், வீசப்படும் கேலிகளை உதறித்தள்ளுவதாக நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் பெண் சமூகம், தான் முன்னேறுவதற்காக ஒவ்வொரு துறையிலும் படும் கஷ்டங்களைக் கண்முன்னே கொண்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick