என் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்! - சுஜாதா அனந்த் | purohitsandcooks website Sujatha shares experience - Aval Vikatan | அவள் விகடன்

என் மூலம் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்! - சுஜாதா அனந்த்

ஐடியா

``ன் தொழிலுக்கான ஐடியா, நான் பணிபுரிந்த அலுவலகத்தின் தகவல் பலகையில் இருந்து கிடைத்தது!” - ஆரம்பிக்கும்போதே சுவாரஸ்யம் கோக்கிறார் சுஜாதா அனந்த். வீடுகளில் பூஜைகள் நடத்தித் தரும் புரோகிதர்கள் மற்றும் உணவு சமைத்துத் தருபவர்களை இணையம் வழியே புக் செய்துகொள்ளும் வகையில், purohitsandcooks.com இணைய தளத்தை வடிவமைத்து நிர்வகித்துவரும் பெங்களூரில் வசிக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணிடம் பேசினோம்.

``பிறந்தது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் படித்து வளர்ந்தேன். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முடித்து, சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்தேன். திருமணத்துக்குப்பின் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன். 13 வருடங்கள் பணிபுரிந்த பின்னர், வீட்டுப் பொறுப்புகளுக்காக வேலையைவிட்டேன். என் சாஃப்ட்வேர் துறை அனுபவத்தைக்கொண்டு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளேயே கிடந்தது. அப்போதுதான், ஒரு விஷயம் ஸ்பார்க் ஆனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick