கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ் | Inspirational talks of Accident affected woman - Aval Vikatan | அவள் விகடன்

கீழே விழுவோம்... எழுந்திருக்கத் தெரிஞ்சிருக்கணும்... அதுதான் வாழ்க்கை! - சுனிதா அடினஸ்

உறவுகள்... உணர்வுகள்...

சுனிதாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட கொடூர விபத்து அது... முகம் இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வட்டம், அதன் நடுவில் சுவாசிக்க இரண்டு துளைகள்... மழிக்கப்பட்ட தலை, நொறுங்கிப்போன பற்கள், மொத்தத்தில் உருக்குலைந்துபோன தோற்றம், 25 வயதில் 27 அறுவை சிகிச்சைகள்... விலகிப்போன நட்புகள், வெறுத்து ஒதுக்கிய சுற்றம்... இத்தனைக்குப் பிறகும் பீனிக்ஸ் மனுஷியாக எழுந்து நின்றிருக்கிறார் சுனிதா அடினஸ்.

ஓசூரில் `ஐபிஎம்'மில் சர்வீஸ் மேனேஜராக இருக்கும் சுனிதாவை சூப்பர் வுமன் எனக் கொண்டாடலாம். சுனிதாவுடன் ஐந்து நிமிடங்கள் உரையாடினால் போதும்... வாழ்வின்மீது பேரன்பும் பெரும் நம்பிக்கையும் பிறக்கும் யாருக்கும்.

‘`சுனிதாங்கிற என் பெயரை இங்கிலீஷ்ல எழுதி, திருப்பிப் போட்டுப் பார்த்தேன்.  அடினஸ்னு வந்தது. வித்தியாசமா தெரிஞ்சது. பெயருக்குப் பின்னால சாதியைப் போட்டுக்கிறதுக்குப் பதில் இது நல்லா இருந்தது. அன்னிலேருந்து நான் சுனிதா அடினஸ் ஆயிட்டேன்’’ - அறிமுகத்திலேயே அசத்துகிறார். பெயரை மட்டுமல்ல, தன் தலையெழுத்தையும் புரட்டிப்போட்டு சாதித்துக்கொண்டிருக்கிற சுவாரஸ்ய மனுஷி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick