இந்த உலகத்துக்கு வந்த காரணம்! - அகிலா

நேசக்காரிகள்

மூகத்துக்கும் சக மனிதனுக் கும் ஏதாவதொரு வகையில் பங்களிப்பதன் வழியாகவே நாம் வாழ்கிற வாழ்வுக்குப் பொருள் இருக்கும் என்று சொல்லும் அகிலா, கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டுக் குரியவை.

ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றாலே கரகரக் குரலும் கண்டிப்பான தோரணையும் கொண்டவர்களுக்கு மத்தியில் அகிலாவின் அப்பா, மிகுந்த இரக்க குணமும் உதவும் பண்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே அப்பாவைப் பார்த்து வளர்ந்த அகிலாவுக்கும் அந்தக் குணம் தொற்றிக்கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இயற்கைப் பராமரிப்பு, சுயதொழில் பயிற்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைநலம், முதியோர்நலம் ஆகியவையே இவரின் இலக்குகள். இவை சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் தன்னார்வலராகப் பணியாற்றுவதுதான் கடந்த பத்தாண்டுகளாக அகிலாவின் வாரக் கடைசி நாள்களின் பணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick