முதல் பெண்கள்! - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி | Biography of Rukmini Lakshmipathi - Aval Vikatan | அவள் விகடன்

முதல் பெண்கள்! - மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் - ருக்மிணி லட்சுமிபதி

முதல் பெண் துணை சபாநாயகர், மதராஸ் மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர்; உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் இந்தியப் பெண்-ஹம்சத்வனி , ஓவியம் : கார்த்திகேயன் மேடி

`ருக்மிணி சுயம்வரம்’... ருக்மிணி - லட்சுமிபதி ஜோடியின் காதல் திருமணத்தை அடிப்படையாகக் கொண்டு, தெலுங்கு மொழியில் புனையப்பட்ட நவீன நாடகம். இதை எழுதிய நாராயண கவி என்பவர், அதை நரசாப்பூர் என்ற ஊரில் மேடை நாடகமாக அரங்கேற்றினார். அப்போதே தென்னிந்தியாவில் பெரிதும் பேசப்பட்டவர் ருக்மிணி!

`கோல்கொண்டா கோஹினூர்’ என்று அழைக்கப்பட்ட ருக்மிணி, 1892 டிசம்பர் 6 அன்று சென்னையில் பிறந்தார். தந்தை சீனிவாச ராவ், தாய் சூடாமணி அம்மாள். பள்ளிப்படிப்புடன் புகழ்பெற்ற வீணைக் கலைஞரான வீணை தனம்மாளிடம் வீணை வாசிப்பும் கற்றுத்தேர்ந்தார் ருக்மிணி. மகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்க முயன்ற சீனிவாச ராவைத் தடுத்த அவர் நண்பர் வீரேசலிங்கம் பந்துலு, ருக்மிணியை நன்கு படிக்கவைக்கும்படி அறிவுரை கூற, சென்னை மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார் ருக்மிணி. அப்போது காலில் ஏற்பட்ட நோய்த் தொற்று ஒன்றைக் குணப்படுத்த மருத்துவரான ஆசந்தா லட்சுமிபதியின் உதவியை நாடினார் ருக்மிணி. இருவரும் காதல் வயப்பட்டனர். 32 வயதான ஆசந்தா லட்சுமிபதி, மனைவியைப் பறிகொடுத்த மருத்துவர். சமூக சேவகராகவும் சீர்திருத்தவாதியாகவும் வலம்வந்த ஆசந்தா, குழந்தைத் திருமணத்துக்கு எதிராகவும் மேடைகளில் முழங்கிவந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick