இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்! | Awareness for Women about Economic security - Aval Vikatan | அவள் விகடன்

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

மனைவி கவனத்துக்குபாஸ்டன் ஸ்ரீராம்

பெண்களின் பாதுகாப்பு பற்றி இப்போது பரவலாகப் பேசப் படுவது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னமும் பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம்.

‘உங்க குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?’

‘நெட் வொர்த்தா? அப்படீன்னா?’

‘குடும்பத்தின் மாதச் சேமிப்பு எவ்வளவு?’

‘அதெல்லாம் என் கணவருக்குத்தான் தெரியும்.’

‘சேமிப்பை எப்படி முதலீடு செய்கிறீர்கள்?’

‘என் கணவர்தாங்க அதெல்லாம் பாக்கறார்.’

‘உங்க கணவருக்கு எவ்வளவு ஆயுள்காப்பீடு இருக்கு?’

‘தெரியலீங்க... எல்.ஐ.சி-யில ஏதோ பாலிசி எடுத்திருக்கார். என் பேர்ல, பிள்ளைங்க பேர்லகூட இருக்கு. மத்த விவரமெல்லாம் அவருக்குத்தான் தெரியும்.’

‘சரி, உங்க வங்கிக் கணக்கின் ஆன்லைன் பாஸ்வேர்டு தெரியுமா?’

‘தெரியாது. அவர் சொல்லவும் இல்லை. எனக்கும் கேக்கணும்னு தோணலை.’

- இந்தியாவில் பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். இவர்களிடம் கேட்க இன்னொரு கேள்வி இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick