தொழிலாளி to முதலாளி - புதிய தொடர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மகளால் லோன் கிடைச்சுது... கணவரின் ஆதரவால் பிசினஸ் வளர்ந்தது! - ஜெயலட்சுமி

தொழிலாளி to முதலாளி

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் புதிய தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ‘சாஸ்தா லெதர் கிராஃப்ட்ஸ்’ஸின் உரிமையாளர், ஜெயலட்சுமி.

டிப்ளோமா படித்திருக்கும் ஜெயலட்சுமி, ஒரு தனியார் நிறுவனத்தில் அட்மின் நிர்வாகியாக வேலை பார்த்துவந்தார். கணவர் ரமேஷ்குமார், தனியார் தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நீண்டகால பணி அனுபவம்கொண்டவர். மகன் பிறந்ததும் அப்போதைய குடும்பச் சூழலால் தன் வேலையிலிருந்து விலகுகிறார். பிறகு `மாத்தி யோசி’த்தவர், வீட்டிலிருந்தபடியே சுயதொழில் தொடங்க முடிவெடுக்கிறார். தெரியாத தொழிலில் இறங்குவதைவிட, தோல் பொருள்கள் தயாரிப்பு பிசினஸ் சிறந்தது என நினைக்கிறார்.

முதல் முயற்சியே சறுக்கலில் முடிகிறது ஜெயலட்சுமிக்கு. வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்தவருக்கு, திட்ட மதிப்பீட்டுத் தொகையான ரூ.7.75 லட்சம் வழங்க ஒப்புதல் கிடைத்துவிட்டது. ஆனால், தொகை கைக்குக் கிடைக்கவில்லை; இவர் தளரவும் இல்லை. ப்ளான்ட் அமைந்திருக்கும் அம்பத்தூரிலிருந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள வங்கிக்கு வாரம் தோறும், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அலைந்தார். கர்ப்பிணியாக இருந்தபோது விண்ணப்பித்தவருக்கு, அந்தக் குழந்தை பிறந்து பேசும் வயதுவரை நீண்டிருக்கிறது காத்திருப்புக் காலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick