கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்! | Awareness for women about Share Market - Aval Vikatan | அவள் விகடன்

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 14 - பங்குச் சந்தை என்னும் வரம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

து வரமா, இல்லை சாபமா?” என்று பலரும் விவாதிப்பது பங்குச் சந்தை பற்றித்தான். இந்தக் கடலில் தோணியேறிப் போய் கைநிறைய அள்ளி வந்தவர்களும் உண்டு; இருப்பதைப் பறிகொடுத்துக் கரை ஒதுங்கியவர்களும் உண்டு. ஆனாலும், அன்றும் இன்றும் இதை நோக்கிச் செல்பவர்கள் அநேகர்.

பங்குகள் என்றால்..?

ஒரு கம்பெனியை உருவாக்கும் உரிமை யாளர், சில வருடங்கள் அதை லாபகரமாக நடத்தியபின், தன் பங்குகளை விற்க முன்வருவார். இதனை ஐ.பி.ஓ (Initial Public Offer) என்பார்கள். உதாரணமாக, ஒரு கம்பெனியை 1,000 பங்குகளாகப் பிரித்தால், அதில் வரும் லாபமும் நஷ்டமும் 1,000 பங்குகளாகப் பிரிக்கப்படும். அதில் நாம் வாங்குவது 100 பங்குகள் என்றால், லாப, நஷ்டத்தில் நம் பங்கு 10%. அந்த கம்பெனியின் செயல் பாடுகளையும் நடப்புகளையும் பொறுத்து, பங்குகளின் விலை ஏறும்; இறங்கும்.

இறக்கத்தில் வாங்கி, ஏற்றத்தில் விற்பதுதான் லாபத்துக்கான சூத்திரம். என்றாலும், எது இறக்கம், எது ஏற்றம் என்று யாருக்கும் தெரியாது. `தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிக் கட்டும்' என்பதுபோல, உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் நடக்கும் சிறு நிகழ்வுகூட பங்குச் சந்தையைப் பாதிக்கும். ட்ரம்ப் தும்மினால்கூட இந்தியப் பங்குச் சந்தை நடுங்கும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick