சம்மர் டிப்ஸ்! | Summer Tips - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/05/2019)

சம்மர் டிப்ஸ்!

வெயிலில் விளையாடிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, உடனே குளிப்பதை வழக்கப்படுத்த வேண்டும். வியர்வை மற்றும் மாசினால் படியும் அழுக்குகள் சருமத்தில் தொற்றுகளை ஏற்படுத்தலாம். வெயிலில் விளையாடச் செல்கிற குழந்தைகளுக்கு வைட்டமின்-சி சத்துள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைக் கொடுக்கலாம். உணவில் பறங்கிக்காய், நெல்லிக் காய், கேரட், தக்காளி, புரோக்கோலி போன்றவை அடிக்கடி இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வெயிலினால் உண்டாகும் பாதிப்புகளை இந்த உணவுகள் விரட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க