செண்பகமே செண்பகமே! - சாந்திப்ரியா | Actress Shanthipriya re-entry in Cinema - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

செண்பகமே செண்பகமே! - சாந்திப்ரியா

மீண்டும்...

பானுப்ரியா கதாநாயகியாகக் கலக்கிக்கொண்டிருந்த வேளையில், செல்லப் போட்டியாக அவர் தங்கை சாந்திப்ரியாவும் (நிஷாந்தி) கதாநாயகியானார். `செண்பகமே செண்பகமே’ பாடல் மூலம் முதல் படத்திலேயே பிரபலமானார். 1990-களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர், திருமணத்துக்குப் பிறகு இல்லற வாழ்வில் பிஸி. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். அக்காவைக் காண சென்னை வந்திருந்தவருடன், ஓர் இனிமைச் சந்திப்பு.

``அக்கா ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்கும்போது அவங்ககூட அடிக்கடி ஷூட்டிங் போவேன். அக்காவின் படங்களில் உதவி இயக்குநராவும் வேலைசெய்திருக்கேன். எனக்கு சினிமா சூழல் பிடிச்சுப்போச்சு. `எங்க ஊரு பாட்டுக்காரன்’ பட வாய்ப்பு வந்தப்ப, `ஏற்கெனவே அக்கா நடிக்கிறா. நீ படிப்பில் கவனம் செலுத்து’ன்னு அம்மா மறுத்தாங்க. கங்கை அமரன் சார் வற்புறுத்திக்கேட்க, நானும் விருப்பப்படவே, அந்தப் படத்தில் ஹீரோயினா நடிச்சேன். ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருந்த அந்த வயசுல, ரொம்ப விளையாட்டுத்தனமா இருப்பேன். இயக்குநர் சொல்லிக்கொடுத்தபடி அப்படியே நடிச்சேன். படம் பெரிய ஹிட்டாகவே, தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்துச்சு.