குழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்! - ஆனந்தி ரகுபதி | Childcare tips for Mothers - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

குழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்! - ஆனந்தி ரகுபதி

தாய்மையின் ஆனந்தத் தருணங்கள்

ர்ப்பம் சுமக்கும் எல்லா அம்மாக்களுக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்கிற கவலையே பிரதானமாக இருக்கும். பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமன்றி, ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். அதற்கு அம்மாக்களின் அக்கறை மட்டுமே போதாது. அணுகுமுறையிலும் மாற்றம் வேண்டும். தனது ‘ஹேப்பி மதர்ஹுட்’ பயிற்சிகளின் மூலம் அதை வலியுறுத்துகிறார் ஆனந்தி ரகுபதி. சென்னையைச் சேர்ந்த இவர், குழந்தைப் பிறப்பு பயிற்சியாளர் மற்றும் உளவியல் ஆலோசகர். இந்தப் பயிற்சிகள் கர்ப்பத்துக்குத் திட்டமிடும் தருணத்திலிருந்தே தொடங்கப்பட வேண்டியவை என்பதையும் அழுத்திச் சொல்கிறார் ஆனந்தி.

‘`எனக்குச் சொந்த ஊர் ஈரோடு. கல்யாணத் துக்கு முன்னாடி யதேச்சையா ஒரு முறை, ஓரிடத்தில் கர்ப்பிணிகளுக்கான பயிற்சி வகுப்புகளை நேரில் பார்க்கிற அனுபவம் கிடைச்சது. கர்ப்பமா இருக்கும்போது அந்த அம்மா என்ன நினைக்கிறாளோ அதெல்லாம் அந்தக் குழந்தையின் மனதில் தீர்க்கமா பதியும்னு அங்கே அந்தப் பயிற்சியாளர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அந்தப் பேச்சுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இலக்கியம் முடிச்சிட்டு, சைக்கோதெரபி படிச்சேன். மக்கள் எப்படி சந்தோஷமா இருக்காங்கன்னு கண்டுபிடிக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க