புதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை! - சுமனா சந்திரசேகர் | Ghatam player Sumana Chandrashekar talks about music experience - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

புதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை! - சுமனா சந்திரசேகர்

டத்துக்கு (Ghatam) இணையான இசைக்கருவி ஒன்றை இரும்பினால் உருவாக்கி, கர்னாடக சங்கீத மேடைகளில் அறிமுகப்படுத்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார், சுமனா சந்திரசேகர். பெங்களூரில் வசிக்கும் இவரிடம் பேசினோம்.

‘`மூன்று தலைமுறைகளாக கர்னாடக இசைக் கலைஞர்களைக்கொண்ட குடும்பத்தில் பிறந்தேன். என் ஏழாவது வயதில் வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்தேன். என் குரு ரத்னம்மா மூர்த்தியின் வீட்டில் இசையுடன், அவர் உருவாக்கிய நூலகத்தில் இசை சம்பந்தமான நூல்களைப் படித்தேன். அதோடு, பிரபல சங்கீத வித்வான்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களின் இசைப் பேழைகளைக் (Recordings) கேட்டு, பல நுணுக்கங்களை அறிந்து கொண்டேன்.