வித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே! - பிரியதர்ஷினி | Priyadarshini Interview about e-waste - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

வித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே! - பிரியதர்ஷினி

சென்னையின் அழகான, அமைதியான மற்றும் தூய்மையான தெருக்களில் மந்தைவெளி திருவீதி அம்மன் தெருவும் ஒன்று. மரங்கள் அடர்ந்து, நிழல்களால் மூடி கத்தரி வெயிலுக்கு ‘விட்டேனா பார்’ எனச் சவால் விடும் அளவுக்குக் குளுமையாக இருந்தது. ஞாயிறு காலை 8 மணி. அப்பார்ட்மென்ட்டுகளின் எதிரே பிளாட்ஃபாரத்தில் ஜெயன்ட் சைஸ் பைகள் விரித்து வைக்கப்பட்டிருக்க, பக்கத்தில் இரு வாலன்டியர்கள் தயாராக இருக்க... அவர்களுக்கு ஏதோ குறிப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தார் பிரியதர்ஷினி, ‘வேஸ்ட் வின் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் நிறுவனர்.

சில நிமிடங்களில் இருசக்கர வாகனங்களிலும் கார்களிலுமாக மக்கள் வரத் தொடங்கினர். வாகனங்களிலிருந்து அட்டைப்பெட்டிகளையும் கட்டைப் பைகளையும் எடுத்துக்கொண்டு பிளாட்ஃபாரத்தை நோக்கி வந்தனர். என்னதான் நடக்கிறது என அறிய ஆவலாக இருக்கிறதா? வாருங்கள்!