வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர் | Motivational Story of Wheel Chair model Pavithra - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

‘`மாற்றுத்திறனாளியா இருக்கிறது போராட்டம்னா, பெண் அப்படி இருக்கிறது அதைவிடப் பெரிய போராட்டம். அவற்றை எல்லாம் கடந்து ஏதாவது சாதிச்சுதான் மாற்றுத்திறனாளிகள் அவங்களுடைய இருப்பை இந்த உலகத்துக்கு உணர்த்த முடியுது...’’ அழுத்தமான குரலில்  ஆதங்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் பவித்ரா ஜெய்சங்கர். சென்னையைச் சேர்ந்த பவித்ராவின் கடந்த கால அடையாளம் மாற்றுத்திறனாளி. நிகழ்காலம் அவருக்கு ‘வீல் சேர் மாடல்’ என்கிற கௌரவ மான அடையாளத்தைத் தந்திருக்கிறது.

போலியோ தாக்குதலுடன், முதுகுப் பகுதி வளைந்திருக்கும் ‘ஸ்பைனல் ஸ்கோலியோசிஸ்’ பிரச்னையாலும் பாதிக்கப்பட்டவர். கனவுகள் நனவான பவித்ராவின் கதை இன்னொரு ‘36 வயதினிலே’.

``84 - 85-ம் வருஷங்களில் சென்னையில் நிறைய பேர் போலியோவால் பாதிக்கப்பட்டாங்க. அவங்கள்ல நானும் ஒருத்தி. போலியோ டிராப்ஸ் போட்டும்கூட எனக்கு இந்த பாதிப்பு வந்தது. மூணு வயதில் காய்ச்சல்ல ஆரம்பிச்ச வாழ்க்கைப் போராட்டம் இன்னிக்கும் தொடருது...’’ - பால்ய காலம் தொடங்கி பருவ காலம் வரையிலான அவரின் போராட்டங்கள் கண்களையும் நெஞ்சையும் கலங்கவைக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க