நம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா! | Vitiligo affected Lavanya Recovered story - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

நம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா!

வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை வெறுத்து ஒதுக்கும் மனோபாவம்தான் நமக்கு அதிகம். அதைப் போன்ற வலி வேறெதுவுமில்லை. அந்த வலியைக் கடந்து வென்று காட்டியிருக்கிறார் பொள்ளாச்சியைச் சேர்ந்த செவிலியர் லாவண்யா.

``12 வயதிலேயே எனக்கு வெண்புள்ளி வந்துவிட்டது. என் பெற்றோர் பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். பலன் கிடைக்கவில்லை. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிடுவேன். ஆனால், ஓரிடத்தில் வெண்புள்ளி மறைந்தால் இன்னோர் இடத்தில் தோன்றிவிடும். 

`செகந்தராபாத்திலுள்ள யுனானி ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை எடுத்தால் வெண்புள்ளிகள் சரியாகிவிடும்' என்று கேள்விப்பட்டு, அங்கே போனோம். அங்கு என்னைப்போலவே வெண்புள்ளி பாதித்த பல பெண்கள் தங்கியிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன். என் அப்பாவிடம், `பயமா இருக்குப்பா... என்னை இங்கே விட்டுட்டுப் போயிடாதப்பா...’ என்று கெஞ்சினேன். இதைக் கேட்டுவிட்டு என் அப்பா என்னை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.