தமிழிசைகள் எப்போது அமைச்சராவது? - பெண்ணும் பொறுப்பும் | Female Ministers in Modi Government - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

தமிழிசைகள் எப்போது அமைச்சராவது? - பெண்ணும் பொறுப்பும்

இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

மோடியின் 2.0 ராஜ்ஜியத்தில் ஆறு பெண்கள் அமைச்சர்களாகப் பொறுப் பேற்றுள்ளனர். புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு 10 சதவிகித இடம் அளிக்கப்பட்டுள்ளது. மோடியைத் தொடர்ந்து 57 பேர் அமைச்சர் களாகப் பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 24 பேர் இணை அமைச்சர்களாகவும் ஒன்பது பேர் தனிப் பொறுப்பு இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

நிதிக்கு நிர்மலா!

பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகிய மூன்று பேரும் கேபினட் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.  கடந்த மோடி அமைச்சரவையில் `பாதுகாப்புத்துறை அமைச்சர்' என்கிற பெருமையைப் பெற்ற முதல் பெண்ணாகத் திகழ்ந்தார் நிர்மலா சீதாராமன். இந்த முறை நிதித்துறைக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். இந்திரா காந்திக்குப் பிறகு நிதித்துறைக்குப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன். 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தக்கூடிய நிதித்துறைக்கு, பொறுப் பான பெண் என்கிற பெருமையைப் பெறுகிறார் மதுரையில் பிறந்த நிர்மலா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க