பெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்! - நசீமா ரசாக் | Story of Emirates writer Naseema - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

பெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்! - நசீமா ரசாக்

யாழ் ஸ்ரீதேவி

து ஒரு பெண் எழுத்தாளரான கதை. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த நசீமா, இப்போது வசிப்பது அமீரகத்தின் புஜேரா பகுதியில். கணவர் அப்துல் ரசாக் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக இருக்கிறார்.

சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ படிப்பை முடித்துள்ள நசீமா, திருமணத்துக்குப் பிறகு துபாய் சென்றார். தன் இரண்டு மகள்களை கவனித்துக் கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டு முழுநேர குடும்ப நிர்வாகியானவர், தனக்குள் எழும் கேள்விகளுக்கு விடை தேடத் தொடங்கினார். அதுவே இவரது எழுத்தாக உருவம் பெறத் தொடங்கியது. கவிதைகளில் தொடங்கி நாவலாசிரியராக இன்று நம்மோடு உரையாடுகிறார். `அமீரக எழுத்தாளர்’ என்ற அடையாளமும் இவரது பலம்.

கவிதை எழுதுவதற்கான விதை எங்கிருந்து விழுந்தது?

``பள்ளி மாணவியா இருந்தப்பவே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டினு மாநில அளவுல பரிசுகள் வாங்கியிருக்கேன். என் சின்ன வயசுல, வெளிநாட்டுல வேலை பார்த்தார் அப்பா. அவரைப் பிரிஞ்ச துயரமே என் எழுத்தின் கருவாச்சு. அமீரகத்தில் குடும்பத்தைவிட்டுப் பிரிஞ்சு வேலைபார்க்கும் பலரின் துயரம், என்னை மறுபடியும்  தீவிரமா எழுதவெச்சது.

சமூகச் செயல்பாடுகள்லயும் எனக்கு ஈடுபாடு உண்டு. அமீரகப் பெண்களுக்கு தியான வகுப்புகள் எடுக்கறேன். வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் கொடுக்கிறேன். இதனால பல பெண்களின் வேதனைகளை என்னால உணர முடிஞ்சது.