குழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா? - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா | Tips for school student to be happy - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

குழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா? - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா

மாதா பிதா குரு

மாணவர்கள் சின்னஞ்சிறு செடிகள் போன்றவர்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் அன்பெனும் நீர் பாய்ச்சி, உத்வேக வார்த்தைகள் என்னும் உரமிட்டு, தவறுகிற நேரங்களில் கண்டிப்புச் சூரியனாக இருக்கும்போதுதான், மாணவர்கள் சந்தோஷமாக வளர்வார்கள். அந்த சந்தோஷம் அவர்களை எத்தனையோ விஷயங்களைச் சாதிக்க வைக்கும். குழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்ஸ்’ ஆக, பெற்றோர்களும் ஆசிரியர்களும் என்னென்ன செய்ய வேண்டும்? சொல்கிறார், ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா.

பெற்றோர்களின் கவனத்துக்கு!

பிள்ளைகள் என்ன செய்தாலும் ‘இதைப் பண்ணாதே... நான் சொல்வதை மட்டும் செய்’ என்று, அந்த இளம் தளிர்களின் தலையில் குட்டிக்கொண்டே இருக்காதீர்கள். வளர்ச்சி பாதிக்கப்படும்.

எப்போதும் ‘படி படி’ என்று அழுத்தம் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் செய்ய விரும்புகிற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டி விட்டீஸை செய்ய அனுமதியுங்கள். கிரிக்கெட்டில் விருப்பம் இருக்கிற பிள்ளையை, ‘நீ பெரிய தோனி ஆகப் போறியாக்கும்’ என்று கேலி செய்து அவர்களுடைய லட்சியங்களின் கால்களைப் பின்னுக்கு இழுக்காதீர்கள்.

பிடித்ததைச் சாப்பிடுவது, பிடித்ததைச் செய்வது என்றிருந்தால், மூளையில் மகிழ்ச்சியைத் தருகிற எண்டோர்பின் ஹார்மோன் சுரக்கும். எனவே, பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் சூழலைத் தாருங்கள். அவர்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடவிடுங்கள்; பிடித்ததைச் செய்யவிடுங்கள். இந்த ஹார்மோன் சுரக்காதபோதுதான் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன், ஆங்சைட்டி எல்லாம் தாக்கும்.

பிள்ளைகளுடன் ஒன்றாக வாக்கிங் போவது, உடற்பயிற்சி செய்வது, இயற்கையை ரசிப்பது போன்றவற்றைச் செய்யுங்கள். இவையெல்லாம் பெற்றோர் தங்கள் தோழர்களே என்கிற உணர்வைப் பிள்ளைகளுக்குத் தரும். அவர்களுடைய மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கவைக்கும்.