பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... | Women Around the World Latest news - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

குளோபல் லீடர்ஷிப் விருது வெல்லும் அடினா!

மெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தையைத் திறம்பட நிர்வகித்துவரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான 50 வயது அடினா ஃப்ரைட்மேனுக்கு சமீபத்தில் குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல், வாஷிங்டன் நகரில் உள்ள யு.எஸ் - இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுசிபிக்) இந்தியா, அமெரிக்கா என இரு நாடுகளிலும் சிறந்த நிர்வாக அதிகாரிகளுக்கு இந்த விருதை வழங்கிக் கௌரவிக்கிறது.