80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்! - ஜெயப்ரதா | 1980s evergreen Heroins - Jaya Prada - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்! - ஜெயப்ரதா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மிழ் சினிமாவில் முத்திரை பதித்த 80’ஸ் எவர்கிரீன் கதாநாயகிகள், தங்களின் வெற்றிக் கதை சொல்லும் தொடர் இது. இந்த இதழில், ஜெயப்ரதா. தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் ஒரே நேரத்தில் கனவுக் கன்னியாக ஜொலித்தவர். நடிப்பு, நடனம், அழகு எனக் கலக்கிய ஜெயப்ரதா, அரசியலிலும் புகழ்பெற்றார்.  இன்றும் நடிப்பைத் தொடர்ந்துகொண்டிருப்பவர், தன் வெற்றிப் பயணம் குறித்துப் பேசுகிறார்.

உதவும் குணம்... அம்மாவிடம் வாங்கிய அடி!

பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திராவில். ரொம்ப மகிழ்ச்சியான குழந்தைப் பருவம். என் சந்தோஷம் எதுவானாலும், அதைப் பிறருக்கும் கடத்துவேன். தனியாகவும் நண்பர்களுடன் சேர்ந்தும் சேவைப் பணிகளைச் செய்வேன். என் ஏழு வயசுல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஓர் உண்டியல்ல நிதி வசூல் பண்ணினேன்.  அப்போ கார்ல வந்த ஒருவர், என் உண்டியலைத் திருடிட்டுப்போயிட்டார். பல நாள்களுக்கு வருத்தப்பட்டு அழுதேன். பிறகு, அப்பாவின் பணத்தில் மக்களுக்கு உதவி செய்தேன்.

நல்லா படிப்பேன். ஆர்வமா மியூசிக், டான்ஸ் கத்துக்கிட்டேன். ஒருமுறை கடும் நெரிசலில் ஆபத்தான முறையில் ரயில் பயணம் மேற்கொண்டு, பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். நான் ரிஸ்க் எடுத்து போட்டிக்குப் போனதால், எங்கம்மா பயங்கரமா அடிச்சாங்க. ஆனாலும், என் கலைப்பயண ஆர்வம் அதிகரிச்சுது. அப்பா கிருஷ்ணா ராவ், தெலுங்கு சினிமா ஃபைனான்ஸியர். அப்பாவுடன் அவ்வப்போது சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். பள்ளி விடுமுறை நாள்கள்ல, அப்பாவுடன் சென்னைக்கு வருவேன். அப்போ என்.டி.ராமராவ் சார் பட ஷூட்டிங்குகள் பார்ப்பேன். அவர் வீட்டுல ஒரு பொண்ணு மாதிரி வளர்ந்தேன். பிற்காலத்துல அவர்கூட ஜோடியா நிறைய படங்கள்ல நடிச்சது எனக்கே ஆச்சர்யம்தான்!