தெய்வ மனுஷிகள்: சிங்களநாச்சி | Human Gods Stories - SingalaNachi - Aval Vikatan | அவள் விகடன்
நேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி! - மீனாட்சி
எதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்
வாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும்! - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)

தெய்வ மனுஷிகள்: சிங்களநாச்சி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ங்காவுக்குக் கிழக்கால இருக்கு ரோகனைக் காடு. உள்ளே நுழைஞ்சா திரும்ப வழி தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியான காடு. அதுக்கு நடுவால குடிசை கட்டி ஒளிஞ்சிருந்தான் மகிந்தன். அவனுக்கு சேதி வந்திருச்சு. சோழராஜா பெரிய படையோட காடு நோக்கி வந்துகிட்டிருக்கார். உடனே தன்னோட ஆளுகளையெல்லாம் தெரட்ட ஆரம்பிச்சுட்டான். மகிந்தனோட பொண்டாட்டி சிங்களநாச்சிக்கு அந்தக் காடே அத்துபடி. விலங்குகளோட பாஷையெல்லாம் அறிஞ்சவ. வாள்வித்தை, வில்வித்தையெல்லாம் படிச்சவ. மகிந்தனோட படைக்கு அவதான் தளபதி.

சிங்களநாச்சி பட்டத்து ராணியா இருக்க வேண்டியவ. சோழராஜாவுக்குப் பயந்து புருஷனும் பொண்டாட்டியும் இந்தக் காட்டுக்குள்ள கெடக்குறாக.

`இதோ, மிருகசீரிசம் வந்திருச்சு. திருவாதிரை யும் தெரிய ஆரம்பிச்சாச்சு. அந்தா, ஒத்தை வெள்ளி முளைச்சாச்சு. கலங்களை இறக்குங்க... கிளம்பலாம்'னு உத்தரவு போட்டான் சோழநாட்டுத் தளபதி. விறுவிறுன்னு நூத்துக்கணக் கான கலங்கள் கடல்ல இறங்கிருச்சு. அக்ர மண்டம், நீலமண்டம், லதாரணி, லூலான்னு சோழராஜாவோட பெரிய பெரிய கலங்களால கடல் தண்ணியே கண்ணுல தண்டல. யானை, குதிரை, அம்பு, வில்லுன்னு கடலே கலகலக்குது.

ஒரு பெருங்கலத்துல ராஜா உக்காந்திருக்காரு. அவுரு கண்ணெல்லாம் செவந்து கெடக்கு. அவருக்கெதிர்ல மந்திரிமார்களெல்லாம் இருக்காக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க