`பாப்பா’ எனக்குள்ள வந்துட்டா! - `பேரன்பு’ சாதனா | Peranbu Movie Sadhana interview - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

`பாப்பா’ எனக்குள்ள வந்துட்டா! - `பேரன்பு’ சாதனா

இவரா அவர்?

மூகத்தில் சவால்களுடன் வாழும் மனிதர்களிடம், நாம் காட்ட வேண்டியது பேரன்பு மட்டுமே என்பதை அழகாக உணர்த்துகிறது, `பேரன்பு’ திரைப்படம். `தங்கமீன்கள்’ டு `பேரன்பு’... இரண்டாவது படத்திலும் தன் நடிப்பால் அசத்தியிருக்கும் சாதனா, அவர்மீது நம்மைப் பேரன்புகொள்ள வைக்கிறார். `அந்தப் `பாப்பா’வா இந்தப் பொண்ணு?’ என்கிற ஆச்சர்யத்துடன், அவருடனான சந்திப்பு தொடங்கியது.

`பேரன்பு’ படத்தில் எப்படி கமிட் ஆனீங்க?

`தங்கமீன்கள்’ படத்துல நடிச்சு முடிச்சதும், நாங்க வசிக்கிற துபாய்க்குப் போய் படிப்பைத் தொடர்ந்தேன். வழக்கம்போல இயக்குநர் ராம் அங்கிள் ஒருநாள் போன் பண்ணினார். `உனக்குக் கூடிய சீக்கிரம் இன்னொரு தேசிய விருது கிடைக்கப்போகுது செல்லம்மா... அடுத்த படத்துல நீ மாற்றுத்திறனாளி ரோல்ல நடிக்கப்போறே’னு சொன்னார். அவர் என்பதால எந்த யோசனையும் இல்லாம `ஓகே’ சொல்லிட்டோம். அவுட்லைன் ஸ்டோரி மட்டும்தான் தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு, ஷூட்டிங் போயிட்டேன்.

‘பாப்பா’ ரோலுக்குப் பயிற்சி தேவைப் பட்டிருக்குமே..?

ஆமாம்! சென்னை அருகிலுள்ள ‘நிப்மெட்’ (NIEPMD - National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) மையத்துல பயிற்சி எடுத்துக்கிட்டேன். மூளை முடக்குவாதக் குறைபாடு உடையவங்க எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணநலன் இருக்கும். அதை யெல்லாம் தெரிஞ்சுகிட்டேன். தவிர, பல தெரபிஸ்ட்டுகளைச் சந்திச்சுப் பேசினேன். நான் கத்துகிட்ட விஷயங்களையெல்லாம் ராம் அங்கிள் கேட்பார். அவரும் ஆலோசனை கொடுப்பார். இப்படி ரெண்டு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கிட்டேன். கண்ணாடி முன்னாடி நிறைய முறை நடிச்சுப் பார்ப்பேன். 

[X] Close

[X] Close