அஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும் | Health benefits of gingelly - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

அஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும்

`இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு…’ - இது நம் முன்னோர் அனுபவ மொழி. தமிழர்கள் முக்கியமாகக் கருதும் நவதானியங்களில் `எள்’ இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பு முதல் இறப்பு வரை, மனிதர்களோடு நெருக்கமாகப் பயணிக்கும் பண்பாட்டு ஒட்டு நிறைந்த நறுமணமூட்டி எள். தாளிப்புப் பொருளாக, சமையல் எண்ணெயாக, உடலைத் தேற்றும் மருந்தாக, பித்தத்தைக் குறைக்கும் எண்ணெய்க் குளியலுக்கு என எள்ளின் விஸ்தாரம் மிக அதிகம். சங்க காலங்களில் ‘எண்’ என எள்ளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எள்ளுருண்டை தயாரிப்பதற்காக, எள்ளை உரலில் போட்டு இடித்து, எண்ணெய்ப் பசை சூழ்ந்த கலவையை வழித்தெடுக்கும் செய்கை கவித்துவமிக்கது.

நான்காயிரம் ஆண்டுகள் பழைமையான எகிப்திய கல்லறையில், ரொட்டிகளின்மீது ஒருவர் எள்ளைத் தூவுவது போன்ற உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்த களிமண் படிமங்களில், எள் சார்ந்த அழுத்தமான ஆதாரம் கிடைத்திருக்கிறது.

[X] Close

[X] Close