முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ் | Earliest pioneers of Physical medicine and rehabilitation - Mary Verghese - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

முதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்

ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

2014-ம் ஆண்டு, வேலூரை அடுத்த பாகாயம் என்ற ஊரில் உள்ள பி.எம்.ஆர் நிலையத்தில் (பிசிக்கல் மெடிசின் - ரீஹேபிலிடேஷன் சென்டர்) நான்கு மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட வீல்சேர் கூடைப்பந்து விளையாட்டுக்குழு தொடங்கப்பட்டது. இன்று, `ஸ்பைனல் ஷூட்டர்ஸ்’ என்ற பெயரில் வளர்ந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகள் அணி, உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று வருகிறது. இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் மறுவாழ்வு மையம், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் கீழ் அமைக்கப்பட்ட இந்த ரீஹேப் சென்டர்தான். இதை நிறுவி, அதன் முதல் தலைவராக இயங்கிய பெண்தான், டாக்டர் மேரி வர்கீஸ்.

1925-ம் ஆண்டு, மே 26 அன்று கொச்சியை அடுத்த சேரை என்ற சிற்றூரில், பெரும் நிலச்சுவான்தார் மகளாகப் பிறந்தவர் மேரி. எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும்போதுதான் மேரிக்கு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் மருத்துவர் ஐடா ஸ்கட்டர் கதையை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன்பின், வேலூர் சி.எம்.சி-தான் தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணியவர், அங்கேயே மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். சி.எம்.சி-க்கு அழைக்கப்பட்டதும், அவரிடம் ஐடா சொன்னது இதுதான்... “ஒரு சிறந்த மருத்துவராகத் தேவையான அனைத்தும் உன்னிடம் இருக்கின்றன.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close