கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!” | Story teller Deepa Kiran - story for students - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”

உலக அளவில் கதை சொல்லும் கலையில் பிரபலமானவர் தீபா கிரண். இரானில் நடைபெற்ற சர்வதேச கதை சொல்லும் திருவிழாவில் கலந்துகொண்ட முதல் இந்தியப் பெண் என்கிற பெருமைக்குரியவர். ஹைதராபாத்தில் வசிக்கும் தீபா, பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளைப் பயமற்று எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் சில கதைகளை வழங்குகிறார். உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்களேன்!

எலியிலிருந்து எலி வரை…

மு
னிவரின் ஆசிரமத்துக்குள் ஓடிவந்து தஞ்சம்புகுந்த எலி, “தயவுசெய்து என்னை இங்கே தங்க அனுமதியுங்கள். வெளியே பூனை ஒன்று என்னை அடித்துத் தின்னக் காத்திருக்கிறது. அதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது” என்று அலறியது.

“உன் வாழ்க்கையை நீதானே வாழ வேண்டும்? இப்படிப் பயந்தால் எப்படி?” என்று வினவிய முனிவர், எலியின் மேல் சிறிது தண்ணீர் தெளிக்க எலி, நாயாக மாறி வாலை அசைத்தது. முனிவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஊருக்குள் ஓடியது.
சில நாள்கள் கழித்து, மீண்டும் முனிவரிடம் ஓடிவந்து தஞ்சமடைந்தது அந்த நாய்.

“ஐயோ… என்னைக் காப்பாற்றுங்கள் சாமி. அந்த ஓநாய் என்னைக் கொல்ல வந்துகொண்டிருக்கிறது. நான் இங்கேயே தங்கிக்கொள்கிறேன்” என்றது. நாயின் மீது முனிவர் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க, நாய் சிறுத்தையாக மாறியது. நன்றி சொல்லிவிட்டுச் சென்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close