தெய்வ மனுஷிகள்: சாமாயி | Human Gods Stories - Samayi - Aval Vikatan | அவள் விகடன்
வாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்! - அனிதா சத்யம்
முகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்! - டி.ஐ.ஜி காமினி
கதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்!”
எதிர்க்குரல்: என்னை விழவைத்துவிடாதீர்கள்! - மேரி

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/02/2019)

தெய்வ மனுஷிகள்: சாமாயி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ங்கரனுக்கும் அமிர்தத்தாயிக்கும் கலியாணமாகி ஏழெட்டு வருஷங்களாச்சு. இன்னும் கடவுள் கண்ணைத் திறக்கலே. பாக்கறவுகள்லாம் கேக்குறாக... `இன்னும் குளிச்சுக்கிட்டுத்தான் இருக்கியா தாயி'னு. அந்த வார்த்தைகளைக் கேக்குறபோதெல்லாம் அமிர்தத்தாயிக்கு காதுல ஈயத்தைக் காச்சி ஊத்துன மாதிரி வலிக்கும். வேண்டாத சாமியில்லை. இருக்காத விரதமில்லை. அமிர்தத்தாயி வயித்துல இன்னும் உசுரு வாய்க்கலே.

தனக்கு ஒரு வாரிசு இல்லேங்கிற கவலை சங்கரனுக்கும் மனசுக்குள்ள முள்ளாக் குத்திக்கிட்டிருக்கு. ஒருநாளு, அமிர்தத்தாயி குளிக்கப்போன இடத்துல, பெரிய வீட்டு காத்தாயி கிழவி பாத்து, `ஒருக்கா அழகர் கோயிலுக்குப் போயி ஒரு ராத்திரி தங்கி வேண்டிக்கிட்டு வா தாயி. நல்லது நடக்கும்'னு சொல்லிட்டுப் போனா. ரெண்டு பேரும் கிளம்பிட்டாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close