அஞ்சறைப் பெட்டி: மிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்! | Health benefits of Chilly - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

அஞ்சறைப் பெட்டி: மிளகாய் உற்சாகம் தரும், ரத்தம் உறைதலைத் தடுக்கும்!

`காரம்’ என்ற சொல் உச்சரிக்கப்பட்டதும் அனைவரது நினைவிலும் சட்டென துளிர்ப்பது `மிளகாய்’. சமீப காலமாக மற்ற அஞ்சறைப் பெட்டி பொருள்களைவிட அதிக அளவில் பயன்படுவது இதுதான்.

உலகப்புகழ் பெற்ற கோங்குரா, மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களின் விறுவிறு விற்பனைக்கு, சுறுசுறுவென வெம்மை தரும் மிளகாயின் தனித்துவமும் முக்கியக் காரணம். உண்ணும் நாக்கையே தீயாக எரியச் செய்தாலும், கண்களிலிருந்து கண்ணீரைத் தாரை தாரையாக வெளியேற்றினாலும் மிளகாய் மீதான நமது பாசம் எள்ளளவும் குறைவதில்லை.

ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குட மிளகாய், காட்டு மிளகாய் எனப் பல்வேறு வகையில் நாவுக்கு காரத்தின் உணர்வைத் தெரிவிக்கின்றன மிளகாய்கள். உலகம் முழுவதும் 3,000 வகை மிளகாய்கள் இருக்கின்றன. மிளகாயின் அளவு குறையக் குறைய, அதன் சிவப்பு நிறம் கூடக் கூட, அதன் காரத்தன்மை அதிகரிக்கும்.