மக்கள் விஞ்ஞானி: மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் எளிய கருவி! | Kerala Scientist Seema invented Simple tool for finding breast cancer - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

மக்கள் விஞ்ஞானி: மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் எளிய கருவி!

ல நேரங்களில் நோயுடன் வாழ்வதைவிடவும் வலி நிறைந்தது அந்த நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை. வலியைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு பரிசோதனைக்கான செலவு பயமுறுத்தலாம். இந்த இரண்டுக்கும் பயந்துகொண்டு சோதனையையே தவிர்க்க நினைப்பவர்கள் பலர். நோய் முற்றிய நிலையில் வேறு வழியின்றி மருத்துவரிடம் செல்லும்போது, சினிமா வசனம் போல ‘கொஞ்சம் முன்னாடியே கவனிச்சிருந்தா காப்பாத்தியிருக்கலாம்’ என்கிற பதிலோடு, பாவமாக முடிந்துபோகும் வாழ்க்கை. இதுபோன்ற பாதிப்புகளுக்குள்ளாகிறவர்களில் பெண்களே பெரும்பான்மை. அதிலும் புற்றுநோய்க்கான பரிசோதனைகளின் வலிக்கும் செலவுக்கும் பயந்து உயிரை விலையாகக் கொடுக்கும் பெண்கள் ஏராளம்.

இதற்குத் தீர்வு கண்டுபிடித்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த விஞ்ஞானி சீமா. இவரது தலைமையில் திருச்சூர், ‘சென்டர் ஃபார் மெட்டீரியல்ஸ் ஃபார் எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி'யைச் சேர்ந்த 10 விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கேன்சர் கண்டறியும் கருவி தேசிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. உள்ளாடை போன்ற வடிவம் கொண்ட இந்தக் கருவி,   புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அலர்ட் செய்யும், அதுவும் உகந்த பட்ஜெட்டில். சீமாவின் இந்த முயற்சியைப் பாராட்டி, மகளிர் மற்றும் குழந்தைகள்நல மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்வுசெய்யப்பட்டு, குடியரசுத் தலைவரால் வருடந்தோறும் வழங்கப்படும் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ வழங்கி கௌரவித்திருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க