அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க! | Inspirational story of Selvaraj, Gnanam and Arputharaj - Junior Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!

ம்மை ஒடுக்க நினைக்கிறவங்க முன்னால வீழ்ந்துடக் கூடாதுங்கிற தவிப்பும் துடிப்பும் எல்லோருக்கும் இருக்கும். ஆனா, பல பேர் தங்களுக்கு நேர்ந்த அவமானங்களைக் காலப்போக்குல மறந்துடுறாங்க. நாங்க அப்படி விட்டுடல...” - உற்சாகத்தோடு, அதன் ஆழத்தில் உறைந்திருக்கும் அழியாத காயங்களும் கலந்து ஒலிக்கிறது ஞானத்தின் குரல்.

கோவை, உப்பிலிபாளையத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் ஞானம் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்தோம். “ராசிபுரத்தை அடுத்த கால்காவேரி கிராமம்தான் நான் பிறந்த ஊர். சாதாரண விவசாயக் குடும்பம். பத்தாவது முடிச்சதும் எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. என் வீட்டைப்போல, இவர் வீட்டிலும் நாலு பொண்ணுங்க, ரெண்டு பசங்கன்னு மொத்தம் ஆறு பேர். பவர்லூம் வெச்சிருந்தாங்க. ஓட்டு வீட்டுல ஆறு மெஷின் எப்பவும் ஓடிக்கிட்டிருக்கும். சாப்பாட்டுக்குப் பிரச்னை இல்லாத வாழ்க்கை. கொஞ்ச வருஷத்துலேயே சொத்து பிரிக்க வேண்டிய சூழல். எங்களுக்குச் சந்துக்குள்ள சின்ன இடமா ஒதுக்கினாங்க. என்ன கோபமோ தெரியலை... எங்ககிட்ட வேலைக்கு வர்ற ஆள்களை தடுத்தாங்க. இன்னும் சொல்ல முடியாத நெருக்கடி களையெல்லாம் அனுபவிச்சோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க