வாவ் பெண்கள்: ஹிட்லர் படைகளை உளவு பார்த்த இந்தியப் பெண்! - நூர் இனயத் கான் | Noor Inayat Khan history - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

வாவ் பெண்கள்: ஹிட்லர் படைகளை உளவு பார்த்த இந்தியப் பெண்! - நூர் இனயத் கான்

ந்தியாவின் ஆளுமைகளான காந்தி, நேரு, அம்பேத்கர் மூவர் மட்டுமே, இங்கிலாந்தின் உயரிய அங்கீகாரமான `நீலப் பட்டயம்' (Blue plaque) பெற்ற இந்தியர்கள். இந்த வரிசையில் நான்காவதாகவும், பெண் என்கிற வகையில் முதலாவதாகவும் ஓர் இந்திய வம்சாவளி ஆளுமைக்கு நீலப் பட்டயம் வழங்கிக் கௌரவப்படுத்தியுள்ளது பிரிட்டன் அரசு...  அவர் இறந்து 75 ஆண்டுகளுக்குப் பின்!

1942-ம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் பிடியிலிருந்த பிரான்ஸில் இங்கிலாந்து நாட்டுக்காக ஜெர்மனிக்கு எதிராக உளவுபார்த்து, நாஜி படையால் சுட்டுக்கொல்லப்பட்ட பிரிட்டனின் இந்திய வம்சாவளிப் பெண் உளவாளி நூர் இனயத் கான்தான், அவர்!

1914 ஜனவரி 1 அன்று இந்திய தந்தையும் மைசூர் பேரரசர் திப்பு சுல்தானின் உறவினருமான இனயத் கானுக்கும், அமெரிக்க தாய் ஒரா ரே பேக்கருக்கும் மாஸ்கோவில் பிறந்தவர் நூர். முதல் உலகப் போரின்போது, அவரது குடும்பம் ரஷ்யாவிலிருந்து பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தது. அங்கு இசையும் குழந்தைகள் மனவியலும் கற்று ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார் நூர். தந்தையின் மறைவுக்குப் பின், பிரான்ஸை ஜெர்மனி கைப்பற்றிய காலகட்டத்தில்  நாஜிகளின் அடக்குமுறையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நூர் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க