நம்பிக்கை நாயகி: சவாலைச் சந்திக்க வேண்டும்! - ரேகா கௌடா | Motivational Speaker Rekha Gowda shares her experience - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

நம்பிக்கை நாயகி: சவாலைச் சந்திக்க வேண்டும்! - ரேகா கௌடா

‘`ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் நிக் வுஜிசி. அவருக்கு கை கால்கள் கிடையாது. ஆனாலும் சாப்பிடறது, நீச்சலடிக்கிறது, டிரைவிங்னு எல்லா வேலைகளையும் தானே செய்வார். கல்யாணமாகி, மூன்று குழந்தைகளுக்கு அப்பா. மோட்டிவேஷனல் ஸ்பீக்கரான அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் ஏறும் மேடைகளில் அவரைப் பற்றிப் பேசத் தவற மாட்டேன். அவராலேயே அணுஅணுவா ரசிச்சு வாழ முடியும்போது நம்மால முடியாதா என்ன?’’

பாசிட்டிவிட்டி அடுத்தவர்களையும் தொற்றிக் கொள்ளும். அதை நிரூபிக்கின்றன ரேகா கௌடாவின் அறிமுக வார்த்தைகள். பெங்களூரின் மல்ட்டி நேஷனல் நிறுவனமொன்றில் இன்ஜினீயராக வேலை பார்க்கும் ரேகா கௌடாவும், முன்னணி மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்களில் ஒருவர். வாழ்வை வெறுத்து விரக்தியின் விளிம்பில் நிற்கும் யாரும், ரேகாவின் பேச்சை ஒருமுறை கேட்டால் மறுபிறவி எடுப்பார்கள். அவரின் வார்த்தைகளில் தன்னம்பிக்கை தாண்டவமாடும். வாழ்க்கையில் எல்லோருக்கும் போராட்டங்கள் வரும்தான். ரேகாவுக்கோ வாழ்க்கையே போராட்டம்தான். `மியூகோபாலிசாக்ரிடோசிஸ்' என்கிற அபூர்வ நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ரேகாவுக்கு வீல் சேர்தான் வாழ்க்கை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க