கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி | Handicraft artist Ramani about Kilukiluppai - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

கிட்ஸ் மனம் கவரும் கிலுகிலுப்பை! - ரமணி

நீங்களும் செய்யலாம்

ங்கள் குழந்தைக்கோ, உங்களுக்கு நெருங்கியவர்களின் குழந்தைகளுக்கோ உங்கள் கைப்பட தைத்த அல்லது எம்ப்ராய்டரிங் செய்த உடைகளைக் கொடுக்கும்போது எப்படியெல்லாம் மகிழ்வீர்கள்? நம் கைப்படத் தயாராகும் எதுவும் அப்படித்தான் அளவிலாத மகிழ்வையும் ஆத்ம திருப்தியையும் தரக்கூடியது. உங்கள் வீட்டின் குட்டிச் செல்லத்துக்கு உங்கள் கைப்பட குட்டியாக ஒரு கிலுகிலுப்பை செய்து தர முடிந்தால்..? அதை ஆட்டும்போதெல்லாம் அந்தப் பிஞ்சு முகத்தில் மலரும் புன்னகைக்கு உலகில் ஈடு இணை இருக்குமா, என்ன?

``உங்கள் குழந்தைகளுக்குச் செய்வதோடு, தெரிந்தவர்கள், அக்கம்பக்கத்து வீட்டினரின் குழந்தைகளுக்கும் செய்து கொடுப்பதன் மூலம் இதையே ஒரு குட்டி பிசினஸாகவும் மாற்றிக்கொள்ளலாம்'' என்கிறார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ரமணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க