எதிர்க்குரல்: மீராவின் காதல் | History of Meera Bai - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

எதிர்க்குரல்: மீராவின் காதல்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

`மழை வரும்போது நான் வருவேன் என்றாய். இதோ மழை வந்துவிட்டது. உன்னைத்தான் காணோம்! காதலால் நான் துவண்டுபோயிருக்கிறேன். உன் மீரா, உனக்காகக் காத்துக்கிடக்கிறாள். தன் உடலையும் உள்ளத்தையும் உனக்கு அளிக்க! எப்போது வருவாய் நீ?’

15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இன்றைய ராஜஸ்தானிலுள்ள மேர்தா என்னும் இடத்தில் அரச குடும்பத்தில் பிறந்தவர், மீராபாய். பக்தி, இசை இரண்டும் இளம் வயதிலேயே அறிமுகமாகிவிட்டன. கண்ணனும்தான். நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, ஒரு நாள் ஊரில் நடைபெற்ற மணவிழாவொன்றைக் கண்டிருக்கிறார். `அம்மா அவர்கள் யார்?' என்று கேட்டபோது, `பெண்ணும் மாப்பிள்ளையும்' என்று பதிலளித்திருக்கிறார் அம்மா. `அப்படியானால் என் மாப்பிள்ளை யார்?' என்று மீரா கேட்டபோது, விளையாட்டாக கண்ணனின் படத்தைக் காட்டியிருக்கிறார் அம்மா. அதோடு, அவர் அதை மறந்து விட்டார்.

பாபர் முகலாயப் பேரரசைக் கட்டமைக்க ஆரம்பித்த காலம் அது. ராஜபுத்திரர்களின் ஆயிரம் ஆண்டுக் காலப் புகழும் பலமும் தேக்கமடைந்திருந்த காலமும்கூட. மேர்தா மீதான தங்கள் பிடியைப் பலப்படுத்திக்கொள்ள வேறொரு ராஜபுத்திர ஆட்சியாளரோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம் மீராவின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. பொதுவாக, இத்தகைய பிணைப்புகள் திருமண உறவின் மூலமே ஏற்படுவது வாடிக்கை. அதைத்தான் அவர்களும் தேர்ந்தெடுத்தார்கள். சித்தோர்கர் பகுதியைச் சேர்ந்த போஜராஜன் என்னும் இளவரசனுக்கு மீராவை மணம் முடித்துக் கொடுத்தார்கள். `இது உன் வாழ்க்கை மட்டுமல்ல, மீரா. நம் ராஜ வம்சத்தின் எதிர்காலமே உன் திருமணத்தில்தான் அடங்கியிருக்கிறது' என்று அனை வரும் ஒன்றுகூடி அழுத்தம் கொடுத்தபோது, மீராவால் மறுக்க முடியவில்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க