என்ன செய்யப் போகிறோம்? - தண்ணீர் பஞ்சமும் தமிழகமும்! | Discuss about Tamil Nadu Water famine - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

என்ன செய்யப் போகிறோம்? - தண்ணீர் பஞ்சமும் தமிழகமும்!

கோடைக்காலம் தொடங்கிய சில நாள்களிலேயே தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிலும், சென்னை மக்கள்  நள்ளிரவிலும் கண் அசராமல் காத்திருந்து தண்ணீர் பிடிக்கும் நிலையில் இருக்கின்றனர். ஐந்து பேர் கொண்ட வீட்டில் நான்கு குடம் தண்ணீர் இருந்தால், இரண்டு மூன்று நாள்களை எப்படிச் சமாளிக்க முடியும்? சென்னையின் ஒரு நாள் தண்ணீர் தேவை 90 கோடி லிட்டர். விநியோகிக்கப்படுவதோ 50 கோடி லிட்டருக்கும் குறைவுதான். தலைநகரான சென்னையில் மட்டுமல்ல; தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் இரண்டு மூன்று நாள்களுக்கு ஒருமுறைதான் மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பல ஏரிகள் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் காய்ந்துகிடக்கின்றன.

தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி மழை அளவான 920 மில்லிமீட்டரில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் 30-35 சதவிகிதமும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் 45-50 சதவிகிதமும் மழைப் பொழிவு கிடைக்கும். கோடை மழையும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் வரும் மழையும் அதைச் சமன் செய்யும். ஆனால், கடந்த ஆண்டில் 789 மி.மீ மட்டுமே மழை பெய்தது. குறைந்தது 14 சதவிகிதம் மழை மட்டுமே. அப்படியென்றால் மீதமுள்ள 86 சதவிகித மழைப் பொழிவு எங்கே? பருவமழை குறைந்ததால்தான் ஏரிகள், குளங்கள் வறண்டு விட்டன என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்?