கல்வியால் உயரணும்; சமூகத்துக்கு உதவணும்! - அபர்ணா | Aparna shares about her social service - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

கல்வியால் உயரணும்; சமூகத்துக்கு உதவணும்! - அபர்ணா

உதவும் உள்ளம்

‘`அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். டிஸ்லெக்ஸியா பாதிப்புள்ள மாணவர் ஒருவரைத் தடகள வீரராக சாதிக்கவைத்தேன். அன்பு காட்டுவது மற்றும் தன்னம்பிக்கை ஊட்டுவதால் இவ்வுலகில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்கலாம் என்கிற நம்பிக்கை அன்றுதான் பிறந்தது’’ என்று புன்னகையுடன் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த அபர்ணா. பள்ளிக் காலங்களில் தொடங்கிய இவரின் சேவைப் பணி, கல்லூரிக் காலத்தில் ‘யங் இண்டியன்ஸ்’ அமைப்பின் தலைவராகும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பகலில் ப்ளே ஸ்கூல் ஆசிரியர் மற்றும் இரவில் தனியார் நிறுவனப் பணி எனத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலையில் அபர்ணாவின் தந்தை சாலை விபத்தால் கோமா நிலைக்குச் சென்று மரணமடைந்தது அவரை உறைய வைத்தது. அந்தத் துயரச் சூழலிலும் தன் சேவை மனதைவிட்டு விடவில்லை அபர்ணா. 

`` `நாம வாழும் காலத்தில் சிலருக்காவது உதவணும்; அவங்களை மகிழ்விக்கணும்’ என்று சொல்லி அப்பாதான் என்னைச் சமூக சேவை செய்ய ஊக்கப்படுத்தினார். அவரின் மறைவு என்னை மிகவும் பாதித்தது. அவர் நினைவாகப் பலருக்கும் உதவ முடிவெடுத்தேன்” என நெகிழ்ச்சியாகக் கூறும் அபர்ணா, யாசகர்களுக்கு வேலை வாங்கிக்கொடுப்பது, திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு செய்வது எனப் பல விஷயங் களைச் செய்திருக்கிறார்.