பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... | Women Around the World Latest news - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பாலின சமத்துவம் பேசும் பெண்கள் இசைக் குழு!

த்தரப்பிரதேசத்தில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் இசைக் குழு `மேரி ஜிந்தகி’. இந்தக் குழுவின் சிறப்பு... டிரம்ஸ் வாசிப்பவர், சிந்தசைஸர் வாசிப்பவர், எலெக்ட்ரிக் கிட்டார் வாசிப்பவர் உட்பட அனைவருமே பெண்கள்தாம். பெண்கள் முன்னேற்றம் குறித்தும், பாலின சமத்துவம் பற்றியும் தொடர்ச்சியாகப் பாடி நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள் இந்தக் குழுவினர். சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில், இந்தக் குழு குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான பாடல்களை இசையமைத்துப் பாடியது. குழுவின் பாடலாசிரியர் ஜெயா திவாரி, “இந்த மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில் ஐந்தில் ஒன்று குழந்தைத் திருமணம். இதுபோன்ற திருமணங்கள் அந்தச் சிறுமிகளின் கனவுகளையும் ஆசைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிடுகின்றன. அதை எதிர்த்துப் பாடல் வடிவில் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். பாடலாகப் பாடுவதால் அது மக்களை எரிச்சல்படுத்துவதில்லை. அவர்களும் எங்களோடு பாடுகிறார்கள்; கைதட்டுகிறார்கள். பாடல் வரிகளையும், இசையையும் பாராட்டுகிறார்கள்” என்று சொல்கிறார்.