நகை தயாரிக்கும் ரோபோ! | Robot making Jewelry - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

நகை தயாரிக்கும் ரோபோ!

விசிட்

நூற்றுக்கணக்கிலான தங்க பிஸ்கட்டுகளை பெட்டி நிறைய அடுக்கி, அதை அங்கும் இங்கும் எறிந்து சண்டைபோடும் காட்சிகளைத் திரைப்படத்தில் பார்த்துப் பழகிய நமக்கு, பத்து தங்க பிஸ்கட்டுகளை பெரிய தாம்பாளத்தில் அடுக்கி, ஒரு டிராலியில் தள்ளிக்கொண்டு வந்த தொழிலாளரைப் பார்த்ததும் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! இப்படி பல அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சர்யங்களை நமக்கு அளித்த தனிஷ்க் தங்கத் தொழிற்சாலை சுற்றுலாவின் சில சுவாரஸ்யத் தகவல்கள்...

கடுமையான சோதனைகளுக்குப் பிறகு, ஓவர்கோட் மற்றும் பிரத்யேகக் காலணிகள் அணிந்து தொழிற்சாலைக்குள் நுழைந்தோம். ஜெர்மனி, சுவீடன், ஜப்பான் ஆகிய  நாடுகளிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, பெரும்பாலும் ஆட்டோமேஷனில் இயங்கிவரும் இந்தத் தொழிற்சாலையில், 800 நேரடித் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.