தொழிலாளி to முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்... ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது! | Employee to Employer series - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

தொழிலாளி to முதலாளி - 8: மூளைக்கு வேலை கொடுத்தோம்... ஜெயலலிதாவின் பாராட்டு கிடைத்தது!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ரேகா ரங்கராஜ் - வித்யா கஜபதி ராஜ் சிங்

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில் சென்னையைச் சேர்ந்த ‘Sumyog’ வெடிங் பிளானர் நிறுவன உரிமையாளர்களான ரேகா ரங்கராஜ் மற்றும் வித்யா கஜபதி ராஜ் சிங்.

10-15 ஆண்டுகளுக்கு முன்புவரை, ஒரு குடும்பத்தில் கல்யாணம் என்றால் பல நாள்களுக்கு முன்பே எல்லா சொந்தபந்தங்களும் ஒன்றுகூடி, ஆளுக்கொரு வேலையாகச் செய்து, திருமணத்தைச் சிறப்பிப்பார்கள். இன்றைய நியூக்ளியர் குடும்பச் சூழலில் இவையெல்லாம் குறைந்துவிட்டன. எனவே, திருமண வேலைகளை எளிதாக்க `வெடிங் பிளானர்’களின் வருகை தீர்வாக அமைந்தது. சென்டிமென்ட் நிகழ்ச்சியாக மட்டுமே இருந்த திருமணங்கள், ‘வெடிங் பிளானர்’களின் வருகைக்குப் பிறகு பிரமாண்டம், வண்ணமயம் என மாறியிருக்கின்றன.

வெளிநாடுகளைத் தொடர்ந்து, 1990-களில் டெல்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய இந்திய நகரங்களில் வெடிங் பிளானர்கள் பிரபலமானார்கள். ரேகாவும் வித்யாவும் பெண்களுக்கான அமைப்பு ஒன்றில் உறுப்பினர்களாகப் பழக ஆரம்பித்து, தோழிகளாகியுள்ளனர். அந்தக் காலத்தில் என்.டி. டி.வி-யில் ஒளிபரப்பான `பிக் ஃபேட் இண்டியன் வெடிங்'  நிகழ்ச்சி பிரபலமானது. அந்த நிகழ்ச்சியைப் பார்த்த வித்யா, அதுகுறித்து ரேகாவிடம் ஆலோசிக்கிறார். இருவருக்கும் அந்த நிகழ்ச்சியில் வரும் கிராண்ட் வெடிங் மற்றும் புதுமையான வேலைப்பாடுகள் பிடித்துப்போகிறது. தமிழகத்திலும் திருமணங்களை வண்ணமயமாக்க நினைக்கின்றனர். தமிழகத்தின் முதல் வெடிங் பிளானர் நிறுவனமாக, 2005-ம் ஆண்டு பிசினஸ் பயணத்தைத் தொடங்குகின்றனர்.