தெய்வ மனுஷிகள்: ராமக்கா | Human Gods Stories - Ramakka - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

தெய்வ மனுஷிகள்: ராமக்கா

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ராமக்காவுக்கு கோவம் வந்திருச்சு. வராதா பின்னே... அண்ணங்காரன்னு மருவாதி குடுத்து வந்து பேசுனா, ரொம்ப எடுத்தெறிஞ்சு பேசுறானே. வர்ற அழுகையை அடக்கிக்கிட்டுக் கேட்டா, ``இந்தா பாருப்பா... நாம ரெண்டு பேரும் ஒருதாய் புள்ளைங்க. என் மவன் உரிமைக் காரன். ஆளு, குலவீரனாத்தான் இருக்கான். எம்புருஷனும் உன்னைப்போலத்தான். ஊத்துமலைக்காட்டுக்கே காவக்காரன். எங்களுக்கு ஒத்தைப் புள்ள. ரத்த உறவு விட்டுப்போகக் கூடாதுன்னு வந்து நல்ல காரியம் பேசுனா, இப்பிடி முகத்தைத் தூக்கிக்கிட்டு நிக்குறியே. உம் பொண்ணை எம் மவனுக்குத் தருவியா, மாட்டியா... எதுவா இருந்தாலும் வெட்டிப்பேசு.'’

அண்ணங்காரனும் விட்டுக்குடுக்காமப் பேசினான்... ``இந்தா பாரு தாயி... எனக்கு உடம்பிறந்தான்னு சொல்ல உன்னைவிட்டா ஆரிருக்கா? நல்லது கெட்டதுன்னா நாமதான் கூடி நிக்கணும். எங்கிட்ட இருக்கிற எல்லா செல்வத்தையும் கேளு, தங்கச்சியாச்சேன்னு தந்து அனுப்புறேன். ஆனா, உம்பயலுக்கு பொண்ணு கேட்டு மட்டும் வந்து நிக்காதே...’'

ராமக்கா வாய்விட்டு அழுதுட்டா. ‘`அப்படி என்னடா, ஊரு உலகத்துல இல்லாத குறையை எம்புள்ளைக்கிட்ட கண்டுபுட்ட? நம்ப சாதி சனத்துல அவம்போல எவனாச்சும் வலுக் கொண்டவன் இருக்கானா? சொத்து சுகத்துக்கு ஆசைப்பட்டா உங்கிட்ட வந்து நிக்கிறேன்... உக்காந்து தின்னாலும் பத்துத் தலைமுறைக்குத் திங்க எங்ககிட்ட செல்வம் குவிஞ்சு கெடக்கு. பாக்கப் பாக்க கண்ணுக்குள்ளயே வளர்ந்தவ. `அத்த அத்த'ன்னு பாசத்தைக் கொட்டுறா.கடைசிக்காலத்துல கொஞ்சம் அனுசரணையா இருப்பாளேன்னு நினைச்சேன். என்னடா குறைகண்டே எம்புள்ளைக்கிட்டே’'ன்னு சண்டைக்கு நின்னா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க