ராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை | Astrological predictions - Aval Vikatan | அவள் விகடன்
கடலில் கலக்கும் கண்மணிகள்! - சிரின் சந்திரன் - அனுராதா சுகுலா
அம்மா என்றால் அசுர உழைப்பு: பென்ஸ் காரில் சிமென்ட் மூட்டை ஏத்த முடியுமான்னு கேட்டாங்க!
நிறைய கற்பனை + கொஞ்சம் உழைப்பு = குவியும் வாட்ஸ்அப் ஆர்டர்கள்!

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/05/2019)

ராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மேஷம்: நிர்வாகத்திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவருக்கு ஆலோசனைகளை வழங்குவீர்கள். அவரின் தயக்கத்தைப் போக்குவீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். விலையுயர்ந்த வாகனம், ஆபரணம் வாங்குவீர்கள். ஆனாலும், நீங்கள் சாதாரணமாகப் பேசிய சில விஷயங்கள் மனஸ்தாபத்தில் முடியலாம். எல்லோரையும் அனுசரித்துப் போகவும். பிள்ளைகளின் உயர்கல்விக்காகக் கொஞ்சம் அலைய நேரிடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். ஆளுமைத்திறன் அதிகரிக்கும் நேரமிது.