Published:Updated:

``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

விஜய் - சங்கீதா ( Photo: Vikatan Archives )

விஜய் மற்றும் சங்கீதாவின் `சோ ஸ்வீட்' காதல் எபிசோடு இங்கே...

``காதலில் நான் ரெண்டாவது வகைங்ணா!" - வித் லவ் விஜய் #VikatanOriginals

விஜய் மற்றும் சங்கீதாவின் `சோ ஸ்வீட்' காதல் எபிசோடு இங்கே...

Published:Updated:
விஜய் - சங்கீதா ( Photo: Vikatan Archives )

பர பர ஐ.டி ரெய்டு, நெய்வேலி ஷூட்டிங்கில் கூடிய ரசிகர் கூட்டம், திடீர் வேன் செல்ஃபி என மீண்டுமொருமுறை தமிழகமெங்கும் பேசுபொருளாகியிருக்கிறார் விஜய். ``நடந்ததெல்லாம் ஆள்வோரின் அரசியலா அல்லது அவரின் நாளைய அரசியலுக்கான அடித்தளமா?" என நண்பா / நண்பிகள் சோஷியல் மீடியாவில் விவாதித்துக் கொண்டிருக்க, சின்னதொரு புன்முறுவலோடு செல்ஃபி எடுத்து நன்றி சொல்லி அனுப்பிவிட்டார். இனி அடுத்ததெல்லாம் ஆடியோ லான்ச்சில்தான் போல..!

இந்த பரபரப்பான நேரத்தில் விஜய்யிடமிருந்து ஒரு `வாலன்டைன்ஸ் டே' மெசேஜ் வந்தால் எப்படி இருக்கும்? வந்திருக்கிறது. #VikatanOriginals-லிருந்து.

இந்த மெசேஜ் வந்தது 2006-ல். அப்போதைய ஆனந்தவிகடன் காதலர் தின சிறப்பிதழுக்காக, தங்கள் காதல் கதையை விகடனிடம் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர் விஜய்யும், அவர் மனைவி சங்கீதாவும். அந்த `சோ ஸ்வீட்' காதல் எபிசோடு இதோ உங்களுக்காக...

19.2.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...

``ஹேப்பி `வாலன்டைன்ஸ் டே’ங்ணா!

கிரீட்டிங் கார்ட் தேடி கடைகடையா அலையறது, எஸ்.எம்.எஸ்-ல ஃபீலிங்கா பிக்சர் மெசேஜ் க்ரியேட் பண்றது, பிடிச்ச பார்ட்னரோட ஊர் சுத்தக் காசு தேத்துறது, மாயாஜால்ல டிக்கெட் ரிசர்வ் பண்றதுனு பிஸியா இருப்பீங்க. காதல் ரொம்ப அழகான விஷயங்ணா!

``காதலிச்சுக் கல்யாணம் பண்றது ஒரு வகை; கல்யாணம் பண்ணிட்டுக் காதலிக்கிறது இன்னொரு வகை. நான் ரெண்டாவது ஜாதிங்ணா. காதலிக்க, கல்யாணம் பண்ண பொண்ணு தேடற ஒவ்வொரு பையனுக் குள்ளேயும் இருக்கிற ஸ்கேல் என்னன்னா, `நம்ம அம்மா மாதிரி ஒரு பொண்ணு வேணும்’ங்கிறதுதான். நான் எதிர்பார்த்தது போலவே அதே பாசம், கோபம், கனிவு, கண்டிப்புனு சங்கீதா எனக்கு இன்னொரு அம்மா.

திருமணத்தில் விஜய்
திருமணத்தில் விஜய்
Photo: Vikatan Archives

ம்... இனிமே நீங்க பேசுங்க மேடம்! கொஞ்சம் நம்ம இமேஜை டேமேஜ் பண்ணாமப் பார்த்துக்கங்க!’’ என விஜய் பவ்யம் காட்ட, சின்ன சிரிப்போடு பேச ஆரம்பிக்கிறார் சங்கீதா.

``ஒருவகையில் எங்களோடது அரேஞ்ச்டு லவ் மேரேஜ். பெரிய சினிமா ஸ்டார்னு இவரை நான்`லவ்’ பண்ணலை. பொதுவா நான் கொஞ்சம் கலாட்டாவான ஆளு. இவர் படு சைலன்ட். ரொம்ப சிம்பிள். ஸ்டார்ங்கிற நினைப்பே இல்லாம ஈஸியா பழகுவார். இந்தப் பண்புதான் எனக்கு ரொம்பப் பிடிச்சுது. விஜய் அப்பப்போ என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஓரக் கண்ணால் ஒரு ரொமான்டிக் மெசேஜ் பாஸ் பண்ணிட்டுப் போவார். சரிதான்... மனசுக்குள்ளே சார் ஒரு அப்ளிகேஷனை ரெடி பண்ணிட்டிருக் கார்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு! நான் ஏதாவது கிண்டல், கலாட்டா பண்ணினா சின்னதா ஒரு ஸ்மைல் தருவார். ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போய், உடனடியா கல்யாணம் வரைக்கும் வந்தாச்சு!’’
என்கிற சங்கீதாவின் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைக்கிறார்.ர்.ர் விஜய்.

``இதெல்லாம் கொஞ்சம் ஓவர் பில்டப். நான் ஒண்ணும் உங்களுக்கு சிக்னல் தரலை. நீங்கதான் தந்தீங்க. இவ்ளோ க்ளீன் கிரீன் சிக்னல் கிடைக்குதேனு நானும் என் மனசை ஓப்பன் பண்ணேன்'' என்கிற விஜய்யை, ``ஓ.கே... ஓ.கே’’ எனப் புன்னகையால் அமர்த்திவிட்டுக் கச்சேரியைத் தொடர்கிறார் சங்கீதா.

``எனக்கு முதல் அன்பளிப்பா தந்த ரிங்கை பத்திரமா, ரொம்ப சென்டிமென்ட்டா வெச்சிருக்கேன். விஜய் எனக்குத் தந்த ரெண்டாவது கிஃப்ட் ஒரு வெள்ளிக் கொலுசு. லண்டன்ல பிறந்து வளர்ந்தாலும், என்னை வீட்ல ரொம்ப டிரெடிஷனலா வளர்த்தாங்க. அந்த சீக்ரெட் தெரிஞ்சு என்னைக் கவுத்துட்டார் தலைவர்.
நான் ரொம்ப அறிவாளியோ, படிப்பாளியோ இல்லீங்ணா. ஆனா, காதல்தான் இந்த உலகம்னு சொல்ல அதெல்லாம் தேவையில்லியே! காதல் ஒரு சந்தோஷமான கமிட்மென்ட். அது நம்ம லைஃபை இன்னும் அழகாக்கணும். ஒரு நல்ல காதல் உங்களை இன்னும் உயரத்துக்கு அழைச்சிட்டுப் போகணும். செதுக்கணும். திருத்தணும். இந்த உலகத்தையே காதலிக்க வைக்கணும். எனக்குச் சங்கீதா அமைஞ்ச மாதிரி, எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு நல்ல பொண்ணு வருவா. உலகத்தில் இருக்கிற எல்லாக் காதலர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகள்! பெத்தவங்க ஆசீர்வாதத்துடன், எல்லாருடைய காதலும் ஜெயிக்கணும்னு ஜீசஸ்கிட்ட பிரே பண்ணிக்கிறோம்.
என்ற விஜய் ரசிகர்கள் மீதான காதல் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
19.2.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
19.2.2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...
#VikatanOriginals

இதுவரைக்கும் பொறுமையா என்னோட டைரியைப் படிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ்ங்ணா. ஒரு நல்ல படம் தந்த மாதிரி மனசெல்லாம் சந்தோஷமா இருக்கு. கூட்டத்துல ஒருத்தனா எங்கேயோ இருந்த சுமாரான பையன் ஒருத்தனை, இவ்வளவு பெரிய இடத்தில் கொண்டு வந்து வெச்சதும் காதல்தான்... ரசிகர்களுக்கு என் மேல் இருக்கிற காதல். எனக்கு சினிமா மேல இருக்கிற காதல்!

`ஆதி’க்கு அடுத்து என்ன படம்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. கதைகள் கேட்டுட்டிருக்கேன். சீக்கிரமே அறிவிப்பு வரும். சீக்கிரமே மறுபடி சந்திப்போம்!

அதுவரைக்கும்... `குட்பை’ங்ணா!

நிருபர்: த.செ.ஞானவேல் / படங்கள்: வி.செந்தில்குமார்